யோகா உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும் யோகா மருந்துக்கு மாற்று அல்ல. தோரணை, மன அழுத்தம், வலி, வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மை சார்ந்த பிரச்சனைகளுக்கு யோகா உதவலாம். இத்தகைய நன்மைகளை கொண்டுள்ள யோகா கருவுறுதல் திறனை அதிகரிக்குமா? உண்மையை நிபுணரிடம் இருந்து கேட்டறிவோம்.
கருவுறுதல் யோகா பற்றிய தகவல்களை ஹைதராபாத்தில் உள்ள நோவா IVF கருத்தரிப்பு நிறுவனத்தில் கருவுறுதல் ஆலோசகரான டாக்டர் லக்ஷ்மி சிறுமாமில்லா அவர்களிடம் இருந்து தெரிந்துகொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் சிறந்த சாறு எது தெரியுமா?
கருவுறுதல் யோகா கருவுறுதலை எவ்வாறு அதிகரிக்கிறது?
கருவுறுதல் பிரச்சினையை எதிர்கொள்ளும் பலரும் பதட்டம், சோர்வு, மன அழுத்தம் போன்ற உணர்வு பூர்வமான விஷயங்களை அனுபவிக்கிறார்கள். இந்நிலையில் மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியை பெற யோகாவின் உதவியை நாடுகிறார்கள்.
கருவுறுதல் யோகா கர்ப்பத்திற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றாலும், இந்த ஆசனங்கள் உடலியல் அமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் இனப்பெருக்க செயல்பாடுகளுக்கு நன்மை அளிப்பதாக நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைத்தல், ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்துதல், இரத்த ஓட்டத்தை சீராக்குதல் மற்றும் தசைகளை வலுப்படுத்துதல் போன்றவற்றிற்கு யோகா சிறந்த பலன்களை தரும். இவை அனைத்தும் பெண்களின் கருவுறுதலை பாதிக்கும் முக்கிய காரணிகள் ஆகும்.
சிறந்த கருவுறுதல் யோகாசனங்கள்
சூரிய நமஸ்காரம்
இது 12 தோரணைகளை கொண்ட பழமையான மற்றும் மிகவும் பிரபலமான யோகாசனங்களில் ஒன்றாகும். சூரிய நமஸ்காரம் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. பெண்கள் தங்களுடைய மாதவிடாய் சுழற்சியைக் ஒழுங்குபடுத்தவும், மாதவிடாய் வலியை குறைக்கவும் மற்றும் மாதவிடாய் நிறுத்தத்தின் சில சிக்கல்களை சமாளிக்கவும் சூரிய நமஸ்காரம் செய்யலாம்.
சூரிய நமஸ்காரத்தை தொடர்ந்து செய்வது கருப்பையில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், இது பிரசவத்தை எளிதாக்கும் எனவும் நிபுணர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது பாலியல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் பாலியல் சுரப்பியின் (எண்டோகிரைன் சுரப்பிகள்) செயலிழப்பு தொடர்பான குறைபாடுகளை நீக்குகிறது. இதை தவிர இளமையிலேயே வயதான தோற்றத்தை கொடுக்கும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கவும் சூரிய நமஸ்காரம் உதவுகிறது.
பச்சிமோத்தானாசனம்
முன்னோக்கி வளையும் இந்த ஆசனம் கீழ் முதுகு, இடுப்பு மற்றும் தொடை எலும்புகளை நீட்சி அடைய செய்கிறது. இது பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை நேரடியாக ஈடுபடுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
சர்வாங்காசனம்
ஷோல்டர் ஸ்டாண்ட் என்றும் அழைக்கப்படும் சர்வாங்காசனம், மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெறவும், சில தைராய்டு பிரச்சனைகளுக்கும் உதவுகிறது. "தைராய்டு-தூண்டுதல் ஹார்மோன்கள் இல்லாததால், தைராய்டு உள்ள பெண்கள் பல உடல்நல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இது அவர்களின் கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கும்" என்று டாக்டர் லக்ஷ்மிஅவர்கள் விளக்கியுள்ளார் . இந்த யோகா தைராய்டு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் ஒரு பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு பயனடைகிறது.
பத்தகோனாசனம்
பட்டாம்பூச்சி போஸ் என்று பிரபலமாக அறியப்படும் பத்தகோனாசனம் உள் தொடைகள், பிறப்புறுப்புகள், இடுப்பு மற்றும் முழங்கால்களின் தசைகளை நீட்சி அடைய செய்கிறது. ஓடுவதற்கு முன் அல்லது தீவிரமான உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆசனத்தை செய்யலாம். இது நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதால் பிரசவத்தின் போது உதவியாக இருக்கும்.
விபரீதா கரணி
சுவரின் மீது கால் வைக்கும் இந்த விபரீத கரணி தோரணை முதுகுவலியிலிருந்து நிவாரணம் பெற உதவும். இது இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. போஸ் கழுத்தின் பின்புறம், முன் உடற்பகுதி மற்றும் கால்களின் பின்புறத்தை நீட்சி அடைய செய்து கால் மற்றும் அதன் தசைகளை தளர்த்த உதவுகிறது.
கருவுறுதல் யோகா பல நன்மைகளை கொண்டுள்ளது. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையை மேம்படுத்தும் என நிபுணர் கூறியுள்ளார். இருப்பினும், கருவுறுதல் மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளை எதிர் கொள்பவர்கள் மருத்துவரை கட்டாயமாக ஆலோசனை செய்ய வேண்டும். மருத்துவர் பரிந்துரை செய்யும் சிகிச்சையுடன் யோகா செய்தால் சிறந்த பலன்களை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கோடை காலத்திற்கு ஏற்ற ஆயுர்வேதிக் டயட் டிப்ஸ்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation