பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட நம் உடலில் இரும்புச் சத்து மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. ஹீமோகுளோபின் உடலில் குறையும் போது, இரத்த சோகை போன்ற நோய்கள் உண்டாகும், இதன் காரணமாக நாம் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர தொடங்குவோம். இதுகுறித்து, புதுதில்லியில் உள்ள சாகேத் எனும் இடத்தில் இருக்கும் மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தென் மண்டலத் தலைவர், உணவியல் நிபுணர் டாக்டர் ரித்திகா சமதர் கூறுகையில், மனித உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் பணியை ஹீமோகுளோபின் மட்டுமே செய்கிறது. உடலின் செயல்பாட்டிற்கு இந்த செயல்முறை மிகவும் முக்கியமானது, ஏனென்றால் ஹீமோகுளோபின் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை எடுத்து கொண்டு, இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டு செல்கிறது.
ஹீமோகுளோபின் அளவு குறையும் போதெல்லாம் பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இரும்புச்சத்து நிறைந்த சில பானங்களைப் பற்றி இங்கே கூறவுள்ளோம், அதை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பீட்ரூட் சாறு
பீட்ரூட் சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீட்ரூட் ஒரு வரப்பிரசாதமாக செயல்படுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் உள்ள இரத்த சோகையை நீக்குவதற்கு மிகவும் உதவியாக உள்ளது.
செய்முறை
- பீட்ரூட், கேரட், ஒரு சிறிய துண்டு இஞ்சி மற்றும் 1 எலுமிச்சை எடுத்துக் கொள்ளவும்.
- முதலில், பீட்ரூட், கேரட் மற்றும் இஞ்சியை கழுவி தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.
- அனைத்து துண்டுகளையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து சாறாக எடுக்கவும்.
- எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கவும்.
கீரை மற்றும் புதினா சாறு
பசலைக்கீரையில் இரும்பு, ஜிங்க், மக்னீசியம் ஆகியவற்றின் அளவு மிக அதிகம். இது தவிர, இந்த பானம் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. தொடர்ந்து இந்த கீரை சாறு குடிப்பதால் மலச்சிக்கல் தீரும், கண்பார்வை மேம்படும், சருமம் பொலிவு பெறுகிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
செய்முறை
- 7-8 புதிய பசலை கீரையின் இலைகள், 7-8 புதினா இலைகள், 1/2 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடி, சுவைக்கு ஏற்ப கருப்பு உப்பு.
- முதலில், பசலை கீரை மற்றும் புதினா இலைகளை சுத்தம் செய்து நன்கு கழுவி சிறிய அளவில் நறுக்கவும்.
- இப்போது மிக்ஸியில் கீரை மற்றும் புதினா இலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் கீரை சாறு எடுக்கவும்.
- அதனுடன் 2 கிளாஸ் தண்ணீர், வறுத்த சீரகம், கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும்.
பிளம் சாறு
பிளம் மிகவும் ஆரோக்கியமானது. நீங்கள் அதை பச்சையாக சாப்பிடலாம் அல்லது அதனை சாறு எடுத்தும் குடிக்கலாம். இதில் பல ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதில் வைட்டமின் A மற்றும் K அதிகம் உள்ளது. பிளம்ஸில் பொட்டாசியமும் அதிகம் உள்ளது.
தேவையான பொருள்
- பிளம்ஸ் பழம்- 7 முதல் 8
- தண்ணீர் - 2 கப்
- சர்க்கரை - 2 டீஸ்பூன்
- கருப்பு உப்பு - ¼ ஸ்பூன்
- கருப்பு மிளகு தூள் - ¼ஸ்பூன்.
செய்முறை
- பிளம் பழங்களை நன்கு கழுவி, கத்தியால் வெட்டி விதைகளை அகற்றவும்.
- ஒரு மிக்ஸியில் அரிந்த பிளம் பழங்கள், ½ கிளாஸ் தண்ணீர், 2 ஸ்பூன் சர்க்கரை, கருப்பு உப்பு மற்றும் கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- கலந்த பிறகு, ஒரு தடிமனான சல்லடை கொண்டு வடிகட்டவும். வடிகட்டிய சாற்றில் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
காய்கறி கலவை சாறு
ஒரு கப் காய்கறி சாற்றில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் ஆற்றல் தரும் சத்துக்கள் காணப்படுகிறது, இதன் காரணமாக நம் உடல் அனைத்து வகையான ஊட்டச்சத்தையும் பெறுகிறது.
தேவையான பொருள்
- கேரட் - 1,பீட்ரூட் - 1, தக்காளி - 1
- இஞ்சித்துண்டு - சிறிய துண்டு, கீரை இலைகள்- 8 முதல் 10
- புதினா இலைகள்- 5, நெல்லிக்காய் - 2, எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்
- கருப்பு உப்பு - ருசிக்கேற்ப.

செய்முறை
இப்போது கேரட், இஞ்சி, பீட்ரூட், தக்காளி, கீரை, புதினா மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு,சாறு எடுக்கவும். பிறகு சாறுடன் கருப்பு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
இதுவும் உதவலாம்:சீமை சாமந்தி டீயின் மிக சிறந்த 6 நன்மைகள் பற்றி தெரியுமா?
ஹலீம் பானம்
போதுமான அளவில் இரும்புச்சத்தினை பெற எளிதான மற்றும் சுவையான வழி தான் இந்த பானம் ஆகும். ஹலீம் விதைகளில் கால்சியம், வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E, புரதம், இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து போன்ற முழுமையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
செய்முறை
- ஹலீம் விதைகள் 1ஸ்பூன் , எலுமிச்சை சாறு 2 ஸ்பூன், தண்ணீர் , 1/2 கப்
- அனைத்தையும் நன்கு கலந்து 2 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு அதை உட்கொள்ளவும்.
- மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய பானங்களை உட்கொள்வதன் மூலம், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதுடன், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation