சீமை சாமந்தி பூக்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இந்த பூக்கள் சரும பராமரிப்பிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனை டீ ஆகவும் செய்து குடிக்கலாம். இதில் உள்ள மூலக்கூறுகள் வயது முதிர்வின் அறிகுறிகளை எதிர்த்து போராட உதவுகின்றன.
நீங்கள் என்றும் இளமையுடன் இருக்க விரும்பினால் இந்த சீமை சாமந்தி பூக்களை கொண்டு டீ செய்து குடிக்கலாம். இதனுடன் வயிறு சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் இது உதவும். இது பல விதமான பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வாக அமைகிறது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோய், மாதவிடாய் வலி மற்றும் தூக்க பிரச்சனைகளை சமாளிக்க உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?
சீமை சாமந்தியில் உள்ள அழற்சி எதிர்ப்பு, ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் பதட்டத்தை எதிர்க்கும் பண்புகள் மாதவிடாய் முன் நோய்க்குறியின் (PMS) அறிகுறிகளை சமாளிக்க உதவுகின்றன. இது மாதவிடாய் நாட்களுக்கு முன்னதாக ஏற்படும் கவலை மற்றும் அசௌகரியத்தை போக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சீமை சாமந்தி டீ குடிக்கும் சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் இருப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்க்கரை நோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இருப்பினும் இவை மருந்துக்கு மாற்று அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
எலும்புகளின் அடர்த்தி குறையும் பொழுது எலும்பு முறிவு ஏற்படவும், தோரணை மோசமாக மாறவும் அதிக வாய்ப்பு உள்ளது. சீமை சாமந்தி டீயில் உள்ள ஃபிளாவனாய்டுகளின் பண்புகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து எலும்பு மெலிதல் நோயை தடுக்க உதவுகின்றன.
தொற்றுநோயை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினையாக வீக்கம் ஏற்படலாம். சீமை சாமந்தி டீயில் உள்ள கலவைகள் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன.
சில ஆய்வுகளின் படி சீமை சாமந்தி டீ புற்றுநோயின் வளர்ச்சியை தடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உள்ள கலவைகள் கல்லீரல் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் இரத்தப் புற்று நோயின் வளர்ச்சியை தடுக்கின்றன. இருப்பினும் இவற்றை நிரூபிக்க கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.
மனதை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை பெற சீமை சாமந்தி டீ குடிக்கலாம். இது தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்த உதவும்.
ஆரோக்கிய நன்மைகளுடன் இணைந்து சீமை சாமந்தி டீ பல அழகு சார்ந்த நன்மைகளையும் தருகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கல் தீர சோம்பை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]