Increase RBC Count : இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?

இரத்த சிவப்பணுக்களை இயற்கையான முறையில் அதிகரிக்க வேண்டுமா? இதை சாத்தியமாக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்…

increase rbc count food plan

இரவு நல்ல நிம்மதியான தூக்கத்திற்கு பிறகு நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா? அல்லது மதிய வேளையிலேயே ஆற்றல் இழந்து காணப்படுகிறீர்களா? நீங்கள் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர் கொண்டால் இது இரத்த சோகை எனும் தீவிர உடல் நல பிரச்சனையாகவும் இருக்கலாம். உங்கள் உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால் இரத்த சோகை ஏற்படும்.

உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதில் இரத்த சிவப்பணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் அளவுகள் குறையும் பொழுது உள் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கு உடல் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் மன அழுத்தம், நோய் தொற்று, குறை பிரசவம் போன்ற பல்வேறு சிக்கல்களும் ஏற்படலாம். இதை சமாளிக்க பின்வரும் ஐந்து ஊட்டச்சத்துக்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரும்புச்சத்து

rbc improving foods

இரும்பு சத்து குறைபாடும் இரத்த சோகைக்கான ஒரு முக்கிய காரணமாகும். இந்நிலையில் இதை தடுக்க இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு புரதமாகும். எனவே உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதன் மூலம் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். இதற்கு சிவப்பு இறைச்சி, பருப்பு வகைகள், முட்டை, பீன்ஸ், உலர்ந்த பழங்கள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

ஃபோலேட்

ஃபோலேட் என்பது ஒரு வகையான வைட்டமின் B ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களின் உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானது. ஃபோலேட்டின் சிறந்த ஆதாரங்களான

கீரை, பச்சை காய்கறிகள், பட்டாணி, பருப்பு போன்ற உணவுகளை சாப்பிடுவதும் மூலம் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

வைட்டமின் B12

இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்தில் வைட்டமின் B12 முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஊட்டச்சத்து குறைபாட்டினால் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். இந்த ஊட்டச்சத்து சிவப்பு இறைச்சி, மீன், மட்டி போன்ற அசைவ உணவுகளிலும் காணப்படுகிறது. இதைத் தவிர்த்து பால் சார்ந்த பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட தானியங்களிலும் வைட்டமின் B12 உள்ளது.

iron rich foods

தாமிரம்

தாமிரம் நேரடியாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவாது, இருப்பினும் இரத்த சிவப்பணுக்கள் இரும்புச் சத்தை பெறுவதற்கு உதவுகிறது. இந்நிலையில் போதுமான அளவு தாமிரம் உள்ள உணவுகளை சாப்பிடாத நிலையில் முழு செயல்முறையும் கடினமாகலாம். மட்டி, செர்ரி, மீன் போன்ற தாமிரம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை எளிதாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயாளிகள் அத்திப்பழம் சாப்பிடலாமா?

வைட்டமின் C

தாமிரத்தைப் போலவே வைட்டமின் C யும் இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு நேரடியாக உதவாது. இது இரும்புச் சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. எனவே இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது வைட்டமின் C உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் பொழுது இரும்புச்சத்தின் உறிஞ்சுதல் சிறப்பாக இருக்கும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP