உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் பழங்கள் மற்றும் காய்கறிகளிடமிருந்து சுலபமாக பெற முடியும். இன்றைய பதிவில் தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை உணவியல் நிபுணரான வித்தி சாவ்லா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
பீட்ரூட் அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சூப்பர் ஃபுட் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார். இதை பொரியல், ஜூஸ், சாலட் போன்ற பல்வேறு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள பல வகையான வைட்டமின்கள், உடலை நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கின்றன. மேலும் இதில் சோடியம், பொட்டாசியம் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, வயிறு மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: சீமை சாமந்தி டீயின் மிக சிறந்த 6 நன்மைகள் பற்றி தெரியுமா?
பீட்ரூட்டில் ஏராளமான வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டு வர உடல் வலிமை அதிகரிக்கும். இது உங்களை நீண்ட நேரத்திற்கு சோர்வடையாமல் வைத்திருக்கும்.
பீட்ரூட் சாப்பிடுவது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதன் மூலம் அடிக்கடி ஏற்படும் மறதியை தடுக்கலாம்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயிற்றில் வளரும் சிசுவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் யாவும் பீட்ரூட்டில் நிறைந்துள்ளன. இது வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளின் ஆபத்தை குறைக்கும்.
உடலில் கால்சியம் சத்துக்கள் குறைவதால் எலும்புகள் பலவீனம் அடையலாம். பெரும்பாலான பெண்களும் கால்சியம் பற்றாக்குறையினால் அவதிப்படுகிறார்கள், இந்நிலையில் கால்சியம் குறைப்பாட்டை பூர்த்தி செய்ய தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடலாம். இதன் மூலம் எலும்பு மெலிதல் நோய் போன்ற எலும்பு சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.
பீட்ரூட்டில் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் இருக்கும். இதனால் உள் உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம் சிறப்பாக இருக்கும். இரும்புச்சத்து நிறைந்த இந்த பீட்ரூட் உங்களை உள்ளிருந்து பலமாக வைத்திருக்கும்.
பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடுவது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. செரிமான மண்டலத்தில் அதிக ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இருந்தால் நோய் எதிர்ப்பு மண்டலமும் வலுப்பெறும். இதன் மூலம் நோய்வாய்ப்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கலாம். இதை தவிர நார்ச்சத்து நிறைந்த பீட்ரூட் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கல் இருந்து விடுபடவும் உதவும்.
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் A, வைட்டமின் C, பொட்டாசியம், மெக்னீசியம் நார்ச்சத்து போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செரிமானம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன.
பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் சரும சேதத்தை சரி செய்து சருமத்தை தெளிவாகவும், பளபளப்பாக மாற்ற உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு பல அற்புத பலன்களை அள்ளித் தரும் முருங்கை இலை பொடி
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]