ஒரு பெண்ணின் உடல் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. பருவமடைவது முதல் மாதவிடாய் நிறுத்தம் வரை ஒரு பெண்ணின் உடலில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனுடன் எலும்பு மெலிதல் நோய், கருவுறாமை, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பெண்களுக்கு ஏற்படக்கூடிய இந்த பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது முருங்கைக் கீரை.
இந்த பதிவும் உதவலாம்: சீமை சாமந்தி டீயின் மிக சிறந்த 6 நன்மைகள் பற்றி தெரியுமா?
பெண்களுக்கு முருங்கை இலை பொடி தரும் ஆரோக்கிய நன்மைகளை இன்று இப்பதிவில் பார்க்கப் போகிறோம். இது குறித்த தகவல்களை தாய் மற்றும் சேய் ஊட்டச்சத்து நிபுணரான ரமிதா கவுர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
இயற்கையாகவே புரதம், இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், வைட்டமின் C, B, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், தாதுக்களும் முருங்கைக் கீரையில் நிறைந்துள்ளன.
முருங்கை இலை பொடி நீர் தேக்கத்தை குறைக்கும். மேலும் இதில் உள்ள டையூரிடிக் பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றன. இவை அனைத்தும் எடை இழப்புக்கு வழி வகுக்கின்றன.
முருங்கை இலை பொடியில் வைட்டமின் E, B, A மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.
நீர்கட்டி பிரச்சனையின் முக்கிய காரணியான இன்சுலின் எதிர்ப்பை சமாளிக்க முருங்கை இலை பொடியை எடுத்துக் கொள்ளலாம். இது நீர் கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிக நன்மைகளை தரும்.
மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளைப் போக்க முருங்கை இலை பொடி பெரிதும் உதவுகிறது. ஏனெனில் இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் A, C போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், வெப்பத்தை குறைக்கவும் உதவுகின்றன.
பல பெண்களும் மாதவிடாய் நாட்களில் தசை பிடித்து பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதிலிருந்து விடுபட முருங்கை இலை பொடியை சாப்பிடலாம். ஏனெனில் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் , உடலை வலுப்படுத்தவும் உதவுகிறது.
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இன் சிறந்த ஆதாரமான முருங்கைக்கீரை இலையை சாப்பிடுவதன் மூலம் எலும்பு மெலிதல் நோயின் அபாயத்தை குறைக்கலாம்.
முருங்கை இலை பொடி மனநிலையை மேம்படுத்தி மன சோர்வில் இருந்து விடுபட உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம், வைட்டமின் A, B, C, E போன்ற ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் மனநிலையை பராமரிக்க உதவுகின்றன.
முருங்கை இலை பொடியை வெந்நீரில், நீங்கள் சமைக்கும் காய்கறியில் அல்லது குழம்புடன் கலந்து சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கல் தீர சோம்பை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]