உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆசனம் சர்வங்காசனம். சர்வம் என்றால் எல்லாம் அல்லது அனைத்தும், அங்கம் என்றால் உடல் உறுப்பு என அர்த்தம். உடல் உறுப்புகளை மேலே தூக்குவது தான் சர்வங்காசனம் ஆகும். சிரசாசனத்தை ஆசனங்களின் ராஜா என குறிப்பிட்டது போல சர்வங்காசனம் ஆசனங்களின் ராணி என்றழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் ஆங்கிலத்தில் Shoulder Stand pose என அழைக்கப்படுகிறது.
![Sarvangasana Benefits]()
- சர்வங்காசனத்தை பயிற்சி ஆசனத்தில் இருந்து தொடங்குவது நல்லது. அதனால் முதலில் ஹாலாசனத்தில் இருந்து தொடங்கலாம்.
- தரையில் நேராக படுத்து கால்களை பாதியாக மடக்கி வையுங்கள். அதன் பிறகு கைகளை பக்கவாட்டில் வைத்த பிறகு கால்களை 90 டிகிரியில் தூக்கவும்.
- இடுப்பு பகுதியில் கைகளை வைத்து அழுத்தம் கொடுத்து கால்களை தலையின் மேலே கொண்டு செல்லவும்.
- இதை செய்யும் போது உங்கள் மார்ப்பு பகுதி தாடையுடன் ஒட்டி இருக்கும். கால்களை 180 டிகிரிக்கு சென்று தரையில் பட்டிருப்பது அவசியம்.
- பத்து விநாடிகளுக்கு இதே நிலையில் இருந்துவிட்டு பொறுமையாக கால்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும்.
- ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம். இந்த ஆசனத்தை செய்யும் போது மூச்சு அடைப்பது போல் இருக்கும். அப்படி இருந்தால் ஆசனத்தை சரியாகச் செய்கிறீர்கள் என அர்த்தம். மேலும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்.
- கவனத்திக் கொள்ளுங்கள். கால்களை தூக்கும் போது தலை ஆடக் கூடாது.
- தற்போது சர்வங்காசனத்திற்கு செல்லலாம். இதில் உங்கள் தலையும், தோள் பட்டையும் மட்டுமே கீழே இருக்கும். இதர உடல் பாகங்கள் மேலே இருக்கும்.
- தரையில் படுத்திருந்தபடி கால்களை 90 டிகிரிக்கு கொண்டு செல்லுங்கள்.
- கைகளை இடுப்பு பகுதியில் முதுகையும் தரையில் படாதபடி மேலே உயர்த்தவும். இப்படி செய்யும் மொத்த அழுத்தமும் தோள் பட்டையிலும், தலையிலும் இருக்கும்.
- இயல்பு நிலைக்குத் திரும்பும் போது பொறுமையாக கால்களை கீழே கொண்டு வரவும். கைகளை சரியாக பயன்படுத்த தவறினால் கால்களை மேலே தூக்குவது சிரமமாக அமையும்.
- பத்து விநாடிகளுக்கு இந்த ஆசனத்தை இருமுறை செய்த பிறகு மச்சாசனம் செய்து உடலை தளர்வுபடுத்திக் கொள்ளலாம்.
- படுத்துக்கொண்டே பத்மாசனம் செய்வது தான் மச்சாசனம் ஆகும்.
- சர்வங்காசனத்தை செய்வது ஆரம்பத்தில் கடினமாக இருக்கும் போது அப்போது சுவற்றுடன் ஒட்டியபடி பயிற்சி செய்யலாம். அதன் பிறகு உங்களுக்கு சர்வங்காசனம் பழகி விடும்.
மேலும் படிங்க கழுத்து வலியை போக்கிடும் சசங்காசனம்
பயன்கள்
- சர்வங்காசனம் செய்வதால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகும். முதுகு தண்டு, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
- குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யலாம்.
- இரத்த கொதிப்பு, இதய நோய் உள்ளவர்கள் சர்வங்காசனம் செய்வதை தவிர்க்கவும்.
மேலும் படிங்க நினைவாற்றலை அதிகரிக்க அர்த்த சிரசாசனம் செய்யுங்க