எந்த ஒரு விளையாட்டிலும் களத்தில் மோதும் எதிராளியை விட சுற்றுப்புற சூழ்நிலையும், பருவநிலையும் வீரர்களுக்கு கடும் சவாலை அளிக்கும். போட்டியில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்ற நிலையில் ரசிகர்களின் கூச்சல் கூட அசெளகரியத்தை ஏற்படுத்தும். டென்னில் விளையாட்டில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான நோவாக் ஜோகாவிக் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் போட்டி தொடங்கும் முன்பாக செய்த வித்தியாசமான பயிற்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஜோகோவிச்சின் பயிற்சி மன அழுத்தம், கவலையில் இருந்து விடுபட உதவும் எனக் கூறப்படுகிறது. அந்த பயிற்சியை எப்படி செய்வது என பார்ப்போம்.
கவலை நீ ஜோகோவிச் பயிற்சி
போட்டி தொடங்கி இறுதி புள்ளியை பெற்று வெற்றியடையும் வரை முழு கவனமும் களத்திற்கு இருக்க வேண்டும் என்பதால் ஜோகோவிச் இந்த பயிற்சியை செய்வதாக கூறப்படுகிறது. மேலும் எதிராளியின் ரசிகர்களின் கூச்சல், வெறுப்பு ஏற்றும் செயல்களால் போட்டியில் இருந்து கவனம் விலகிச் செல்லக் கூடாது. இதற்காகவே களத்தில் அந்த பயிற்சியை செய்கிறார். நாமும் அந்த பயிற்சியை செய்து மன அழுத்தம், கவலையில் இருந்து விடுபடலாம்.
Novak method - anxiety/stress release (did it today too)
— 𝐍𝐢𝐯𝐞𝐬 🕊️ (@Noel_Arc) July 9, 2025
Translation is not needed, just follow the steps of this man. pic.twitter.com/1VpdurSkg4
மன அழுத்தம், கவலை நீங்க பயிற்சி
- முதலில் நேராக நிற்கவும். அதன் பிறகு வலது காலை இடது கால் தாண்டி(கிராஸ்) வைக்கவும். வலது கை இடது கை அக்குளுக்கு கீழ் வைக்கவும்.
- இடது கையை சுழற்றி வலது தோல்பட்டையை பிடிக்கவும். அடுத்ததாக கழுத்தை இடது பக்கம் நோக்கி திருப்புங்கள்.
- உடலை வலது பக்கம் நோக்கி சற்று திருப்பி மூன்று முறை ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து விடவும். இப்போது உடலை இடது பக்கமாக திருப்பி மூன்று முறை மூச்சை இழுத்து உள்ளே விடவும்.
- இதே போல இடது காலை வலது கால் தாண்டி வைக்கவும். அடுத்தடுத்த படிகளை தொடரவும்.
- செர்பிய நாட்டை சேர்ந்த உடற்பயிற்சியாளர் இந்த பயிற்சியை விளக்கி உடலில் மன அழுத்தம், கவலை குறைவதாக தெரிவித்துள்ளார். நீங்களும் இதை வீட்டில் முயற்சி செய்யலாம்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation