பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் தலைவன் தலைவி படம் ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. காளி வெங்கட், யோகி பாபு, சென்றாயன், விஜய் டிவி மைனா, ரோஷினி ஹரிபிரியன், ஆர்.கே.சுரேஷ், சரவணன், தீபா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாண்டிராஜ் இதற்கு முன்பாக இயக்கிய கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை படங்கள் தமிழகத்தில் நல்ல வசூலை குவித்தன. அந்த வரிசையில் தலைவன் தலைவி இணையுமா ? படம் எப்படி இருக்கிறது ? வாருங்கள் பார்ப்போம்.
தலைவன் தலைவி கதைச்சுருக்கம்
காரணமின்றி அடிக்கடி சண்டை போட்டு பிரியும் தம்பதி விஜய் சேதுபதி - நித்யா மேனன் இறுதியில் சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பதே தலைவன் தலைவி.
தலைவன் தலைவி விமர்சனம்
குடும்ப சண்டையால் மூன்று மாதங்களாக பிரிந்திருக்கும் விஜய் சேதுபதி - நித்யா மேனன் குல தெய்வ கோயிலில் சந்திக்கின்றனர். அங்கு இருவரின் உறவினர்களும் குவிகின்றனர். இருவருக்கு இடையிலான சண்டையை தீர்த்து வைக்க காளி வெங்கட் முதல் ஊர் தலைவர்கள் வரை பேசியும் பயனில்லை. இதற்கிடையில் விஜய் சேதுபதியை அடிப்பதற்கு ஊரே புறப்பட்டு வருகிறது. இறுதியில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் சேர்ந்தனரா ? இல்லையா ? 2.30 மணி நேரத்தில் ஜனரஞ்சக படமாக எடுக்க முயன்றுள்ளனர்.
தலைவன் தலைவி படத்தின் பாஸிட்டிவ்ஸ்
- விஜய் சேதுபதி நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாலியாக நடித்திருக்கிறார். மனைவி மீதான பாசம், எதிராளிகளுடான சண்டை கருப்பன் படத்தை நினைவூட்டுகிறது.
- நித்யா மேனனுக்கு மீண்டும் விருந்து படைக்கும் கதாபாத்திரம். எல்லா காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
- யோகி பாபுவின் ஒன் லைன் மற்றும் டைமிங் காமெடி கலகலப்பூட்டுகிறது. விஜய் சேதுபதியின் அம்மா கதாபாத்திரமான தீபா அட்டகாசம். இரண்டாம் பாதியில் நித்யா மேனனுக்கு கடும் போட்டியாக நடித்திருக்கிறார்.
- சந்தோஷ் நாராயணின் பாடல்கள், பின்னணி இசை படத்தை தொய்வின்றி கடத்தி செல்கிறது.
தலைவன் தலைவி படத்தின் நெகட்டிவ்ஸ்
- டிவி சீரியல் திங்கள் முதல் வியாழன் வரை பார்த்த பிறகு இந்த சீரியலை மீண்டும் பார்க்கவே கூடாது என நினைப்போம். வெள்ளிக்கிழமையில் ஏதாவது ஒரு ட்விஸ்ட் வைத்து திங்கட்கிழமை மீண்டும் பார்க்க வைத்திடுவார்கள். தலைவன் தலைவி அப்படியான படமே.
- பொறுமையை சோதிக்கும் ரிபீட் காட்சிகளை யோகி பாபுவின் டைமிங் காமெடி காபாற்றிவிடுகிறது. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஏன் ஏதற்கு என்று தெரியாமலேயே சண்டை போட்டு கொள்கின்றனர்.
- சந்தோஷ் நாராயணின் இசையில் இடம்பெறும் ஒரு பாடல் ரெட்ரோ கனிமா பாடலின் காப்பியோ என தோன்றுகிறது.
- பரோட்டா கடையில் நடக்கும் ஒரு சண்டை காட்சியை தவிர பிற சண்டை காட்சிகள் முற்றிலும் தேவையற்றதே.
- பரோட்டா சாப்பிட்டு மாப்பிள்ளைக்கு ஓகே சொல்வார்களா ?
தலைவன் தலைவி ரேட்டிங் - 2.5 / 5
படத்தில் பிறந்தநாள் கொண்டாட காத்திருக்கும் இரண்டு குழந்தைகள் நிஜ துப்பாக்கியை வைத்து மிரட்டி விளையாடுவது, நித்யா மேனன் - விஜய் சேதுபதியின் சண்டையை பொறுக்காமல் தங்களது வேலையை பார்க்க கிளம்பிவிடுவது போல் காண்பிப்பார்கள். நமக்கும் அந்த துப்பாக்கியை வைத்து நடிகர்களை சுட்டு விடலாமா ? இவங்களுக்கு வேற வேலையே இல்லையா தியேட்டரை விட்டு கிளம்பலாம் போல தோன்றுகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation