அஷ்வின் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள அனிமேஷன் ஆன்மிக படம் மகாவதார் நரசிம்மா. சில மாதங்களுக்கு முன்பு கே.ஜி.எஃப் தயாரிப்பு நிறுவனம் மகாவதார் யுனிவர்ஸ் என்ற தலைப்பில் ஏழு படங்களின் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி தற்போது மகாவதார் நரசிம்மா ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிறிய வயதில் பாட்டி புராணக் கதைகள் சொல்லி கேட்டிருப்போம் அல்லது சில தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். அவற்றை கிராஃபிக்ஸ் பயன்படுத்தி திரை வடிவிற்கு மாற்றி படமாக எடுத்துள்ளனர். வாருங்கள் மகாவதார் நரசிம்மா விமர்சனத்தை பார்ப்போம்.
அசுர குலத்தில் பிறந்த ஹிரண்யகசிபு மற்றும் ஹிரண்யாஷவை விஷ்ணு பகவான் எப்படி வராஹ (பன்றி ரூபம்) அவதாரம் மற்றும் நரசிம்ம அவதாரம் எடுத்து கொன்றார் என்பதே மகாவதார் நரசிம்மா.
அசுர குலத்தில் பிறந்த ஹிரண்யகசிபு, ஹிரண்யாஷ உலகை ஆழ வேண்டும் என நினைக்கின்றனர். மந்திரங்களை கற்று சக்திகளை பெற்று தேவர்களை அடிமையாக்குகின்றனர். அப்போது விஷ்ணு பகவான் பன்றி அவதாரம் எடுத்து ஹிரண்யாஷை அழிக்கிறார். இதையடுத்து தீவிர தவமிருந்து ஹிரண்யகசிபு பிரம்மாவிடம் இருந்து சக்திகளையும், சாகா வரத்தையும் பெறுகிறார். எனினும் அவரது மகன் பிரகலாதன் தீவிர விஷ்ணு பக்தனாக பிறக்கின்றான். ஒரு கட்டத்தில் ஹிரண்யகசிபு பிரகலாதனை கொல்ல துணிகிறார். அப்போது விஷ்ணு பகவான் நரசிம்ம அவதாரம் எடுக்கிறார். இதை 2 மணி நேர அனிமேஷன் படமாக எடுத்துள்ளனர்.
குழந்தைகள், புராணக் கதைகளை விரும்பி படிப்போருக்கு மகாவதார் நரசிம்மா கண்டிப்பாக பிடிக்கும். திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் போது பார்த்து மெய் மறந்திடுங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]