herzindagi
image

Hridayapoorvam twitter review: ஹிருதயபூர்வம் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம்; நகைச்சுவையில் கலக்கி இருப்பதாக ரசிகர்கள் கருத்து

Hridayapoorvam twitter review: மோகன்லால் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் ஹிருதயபூர்வம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் இப்படம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
Editorial
Updated:- 2025-08-28, 17:13 IST

Hridayapoorvam twitter review: ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஹிருதயபூர்வம் திரைப்படத்திற்கு பலரும் நேர்மறையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஃபீல் குட் சினிமா பாணியில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.

மேலும் படிக்க: Coolie ott release: ரஜினிகாந்த் - லோகேஷ் கூட்டணியில் வெளியான கூலி; எந்த ஓடிடியில் எப்போது பார்க்கலாம்?

 

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இந்த ஆண்டில் ஏற்கனவே இவரது நடிப்பில் வெளியான எம்புரான், துடரும் ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன. இதன் தொடர்ச்சியாக சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால், மாளவிகா மோகனன், சங்கீத் பிரதாப் ஆகியோர் நடிப்பில் ஹிருதயபூர்வம் என்ற திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் விமர்சனத்தை ட்விட்டரில் (எக்ஸ் தளத்தில்) பதிவிட்டு வருகின்றனர்.

Hridayapoorvam Movie

 

அதன்படி ட்விட்டரில் ஒரு பயனர், "இயக்குநர் சத்யன் அந்திகாட் பாணியிலிருந்து சற்று விலகி, மாறிவரும் காலத்திற்கு ஏற்றவாறு, அதே சமயம் அவரது தனித்துவமான முத்திரையுடன் ஹிருதயபூர்வம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஆங்காங்கே தொய்வுகள் இருந்த போதிலும், மோகன்லாலின் நடிப்பு அவை அனைத்தையும் கடந்து மிகச் சரியாக பொருந்தியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: Nivetha pethuraj: காதலரை அறிமுகப்படுத்திய நடிகை நிவேதா பெத்துராஜ்; வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் ஆச்சரியம்!

 

இதேபோல், வருண் என்று பெயரிடப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் இருந்து, இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "படம் முழுவதும் நகைச்சுவை கலந்த காதல் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. மோகன்லால் மற்றும் சங்கீத் பிரதாப்பின் நடிப்பு பார்ப்பதற்கு மிகவும் புதுமையாக உள்ளது. இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் சத்யன் இப்படத்தை இயக்கியுள்ளார். பாடல்கள் மற்றும் படத்தின் இறுதிக் காட்சி வரை அனைத்தும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "ஹிருதயபூர்வம் திரைப்படம் சிறப்பாக அமைந்துள்ளது. சந்தீப் என்ற பாத்திரத்தில் மோகன்லால் மிக அழகாக நடித்துள்ளார். ஃபீல் குட் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சங்கீத் பிரதாப்பின் நகைச்சுவை மற்றும் மாளவிகாவின் நடிப்பும் சிறப்பாக உள்ளது" என பி.எஸ். நாத் என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Malavika Mohanan

குறிப்பாக, "மோகன்லால் மற்றும் சத்யன் அந்திகாட் ஆகியோரின் வெற்றி கூட்டணியிடமிருந்து ஒரு அழகான மனதை தொடும் படம் வெளியாகி இருக்கிறது. நல்ல வசனங்கள், இயல்பான நகைச்சுவை, மென்மையான உணர்வுகள் மற்றும் இதமான உறவுகள் ஆகியவை இந்தப் படத்தை சீராக மாற்றுகின்றன.

மோகன்லால் தனக்கே உரிய பாணியில் நடித்துள்ளார், மேலும், படத்தின் பிற்பகுதியில் சில ஆழமான வசனங்களை பேசுகிறார். அதே நேரத்தில், சங்கீத் பிரதாப் தன்னுடைய நகைச்சுவை வசனங்களில் அசத்துகிறார். எளிமையான மற்றும் இதமான கதைக்களத்தில் படம் அமைந்துள்ளது. குடும்ப உறவுகளை போற்றுவதோடு, பார்வையாளர்கள் அனைவரும் ஒரு புன்னகையுடன் திரையரங்கை விட்டு வெளியேறுவதை இப்படம் உறுதி செய்கிறது" என மற்றொரு ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]