உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் கூர்மாசனம். இது தமிழில் ஆமை ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Tortoise pose ஆகும். வழக்கம் போல ஆசனத்திற்கு முன்பாகத் தளர்வு பயிற்சியில் இருந்து தொடங்கலாம். தரையில் உட்கார்ந்து வலது காலை மட்டும் நீட்டுங்கள். இடது கால் மடக்கி இடுக்கட்டும். தற்போது கைகளை கோர்த்து வலது காலின் பாதம் அல்லது பெரு விரல்களை பிடிக்கவும். சொடக்கு போடுவது போல் பெருவிரலை பிடிக்கலாம்.
அப்படியே 65 டிகிரிக்கு காலை மேலே தூக்கவும். முட்டியை மடக்க கூடாது. தொடைப்பகுதியில் எதோ ஒன்று இழுப்பது போல் உணர்வீர்கள். சில விநாடிகளுக்கு இதே நிலையில் இருக்கவும். தற்போது அப்படியே கைகளை கொஞ்சம் மடக்கி காலை முகத்திற்கு கிட்டே 90 டிகிரிக்கு கொண்டு வந்து மூக்குடன் ஒட்டவும். பொறுமையாக காலை கீழே கொண்டு வரவும். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்.
கால் வலிப்பது போல இருக்கும். ஆனால் இப்படி செய்வதால் தான் பலன்கள் கிடைக்கின்றன. இதே போல இடது காலிலும் பத்து விநாடிகளுக்கு செய்யுங்கள். இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு கால்களை நீட்டி உதறி தள்ளினால் தளர்வாகிவிடும்.
அடுத்ததாக கூர்மாசனத்திற்கு செல்லலாம். ஐயப்பன் சுவாமி போல் அமர்ந்த பிறகு வலது கையை வலது காலிற்கு அடியே விடவும். அதே போல இடது கையை இடது காலிற்கு அடியே விடவும். கைகளை பக்கவாட்டிலும் வைக்கலாம் அல்லது பின் நோக்கியும் வைக்கலாம். இதைத் தொடர்ந்து குதிகால்களை தரையுடன் தேய்த்து கொண்டே கால்களை முன்நோக்கி கொண்டு செல்லவும்.
மேலும் படிங்க உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சர்வங்காசனம்
இதை செய்யும் போதே முதுகை கீழ் நோக்கி அழுத்தவும். தாடை பகுதி முழுவதுமாக தரையில் இருப்பது அவசியம். கால் விரல்கள் முன்நோக்கி இருக்க வேண்டும். பத்து விநாடிகளுக்கு இதே நிலையில் இருந்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்புங்கள். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்.
முதுகு தண்டில் அதிக அழுத்தம் கொடுத்து இருப்பதால் மர்ஜாரியாசனம் செய்து உடலை தளர்த்துங்கள். தாடையை கீழே வைக்க கடினமாக இருந்தாலும் முடிந்தவரை முன்நோக்கி படுக்கவும்
பயன்கள்
- இது வளர்சிதை மாற்றம் மற்றும் மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் பிரச்சினை ஆகியவற்றை தடுக்க உதவுகிறது.
- கூர்மாசனம் குறிப்பாக இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
- கூர்மாசனம் உடலின் நுட்பமான ஆற்றல் மையங்களான சக்கரங்களை தூண்டி விடுகின்றது. இது நமது உடல் ஆரோக்கியத்திக்கு பெரிதும் நன்மை பயக்கிறது.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation