உடல் நலனும் யோகாவும் எனும் தொடரில் நாம் பல ஆசனங்களை பற்றி பகிர்ந்து வருகிறோம். இதில் எளிதாக செய்யக் கூடிய ஆசனம் என்றால் அது திரிகோணாசனம் தான். அதுமட்டுமின்றி இது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலன் தருகிறது. இந்த ஆசனம் ஆங்கிலத்தில் Triangle Pose என அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் நின்ற நிலையில் செய்யப்படுகிறது. திரி என்றால் மூன்று, கோணா என்றால் முனை என அர்த்தமாகும்.
எந்தவொரு ஆசனமாக இருந்தாலும் அதை செய்யும் முன்பாகத் தளர்வு பயிற்சி செய்வது பலன்களைத் தரும். முதல் நேராக நில்லுங்கள். அதன் பிறகு கால்களை கொஞ்சம் அகற்றி வைத்து வலது கையை மேலே தூக்கி இடது பக்கமாக அப்படியே சாய்க்கவும். இப்படியே பத்து விநாடிகளுக்கு இருங்கள். அடுத்ததாக இடது கையை உயர்த்தி வலது பக்கம் சாய்க்கவும். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.
தற்போது திரிகோணாசனத்திற்கு செல்லலாம். உங்களின் உயரத்திற்கு ஏற்ப கால்களைக் குறைந்தது இரண்டு அடிக்கு மேல் அகற்றி வையுங்கள். கைகளை தோள்பட்டை அளவிற்கு உயர்த்தி வலது காலை வலது பக்கம் திருப்புங்கள். தலையையும் வலது பக்கம் திருப்புங்கள், அப்படியே வலது கையை கீழே கொண்டு வந்து தரையில் வைக்கவும்.
இப்போது உங்கள் இடது பக்க இடுப்பிற்கு நெகிழ்வு தன்மை கிடைக்கும். மார்பு பகுதியும் இடுப்பு பகுதியும் நேர் கோட்டில் இருக்க வேண்டும். இடது கையை நேராக உயர்த்தி அதைப் பார்க்கவும். பத்து விநாடிகளுக்கு இதே நிலையில் இருங்கள். அப்படியே மாறாக இடது காலை இடது பக்கமாக திருப்புங்கள். தலையை இடது பக்கம் திருப்பவும். உடலைச் சாய்த்து இடது கையை தரையில் வைக்கவும், வலது கையை மேல் நோக்கி உயரத்தி இருக்க வேண்டும்.
மேலும் படிங்க கர்ப்பப்பையை வலுவாக்க உத்தான பாதாசனம் செய்யுங்கள்
இயல்பு நிலைக்குத் திரும்பி கால்களை ஒன்று சேர்த்து கைகளை உடலுக்கு ஒட்டி வைத்து ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். இந்த ஆசனத்தில் உங்கள் மார்பு பகுதி பின்நோக்கியே இருக்க வேண்டும். இது திரிகோணாசனம் ஆகும். இதைச் செய்வது உங்களுக்குக் கடினமாக இருந்தால் மாற்று வழி உள்ளது.
கையை தரையில் வைப்பதற்கு பதிலாக மணிக்கட்டு பகுதியில் வைத்து பிடித்து கொள்ளுங்கள். சரியாகத் செய்யத் தவறினால் இடுப்பு பகுதியில் பிடிப்பு ஏற்படும். பொறுமையாகச் செய்யுங்கள். அவசரம் தேவையில்லை.
மேலும் படிங்க முதுகுத் தண்டை வலுப்படுத்தும் மர்ஜாரியாசனம்
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]