உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆசனம் "உத்தான பாதாசனம்". இது தரையில் படுத்துவிட்டு செய்யும் யோகாசனம் ஆகும். உத்தான பாதாசனம் கால்களை உயர்த்தி செய்ய வேண்டிய ஆசனமாகும். உத்தான என்றால் தூக்குவது என்று அர்த்தம். இப்படி ஒவ்வொரு ஆசனத்திற்கும் அர்த்தம் புரிந்து அதைச் செய்வது நல்லது.
தரையில் கால்களை நீட்டி நன்கு படுத்துக் கொள்ளவும். கைகள் இரண்டையும் பக்க வாட்டில் வைக்கவும். தற்போது வலது காலை மட்டும் 40 டிகிரி அளவிற்கு தூக்குங்கள். ரொம்பவும் மேலே தூக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கென்று கால் ரொம்பவும் கீழே இருக்க வேண்டாம். நடு நிலையில் வைக்கவும்.
கால் விரல்களை toe pointing போல முன்னோக்கி வைக்கவும். இந்த நிலையில் பத்து விநாடிகளுக்கு வலது காலை வைத்திருங்கள். தற்போது காலை கீழே இறக்கி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். இப்போது இடது காலை தூக்கி 40 டிகிரியில் வைக்கவும். முட்டி மடங்காமல் கால் தூக்கப்பட்டு இருக்க வேண்டும்.
இந்த நிலையில் பத்து விநாடிகளுக்கு இருங்கள். இயல்பு நிலைக்கு திரும்ப இடது காலை கீழே இறக்கிவிட்டு ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். அடுத்ததாக இரண்டு கால்களையும் சேர்த்து தூக்கி உத்தான பாதாசனம் செய்ய போகிறோம்.
மேலும் படிங்க முதுகுத் தண்டை வலுப்படுத்தும் மர்ஜாரியாசனம்
இதை செய்வதற்கு சற்று கடினமாக இருப்பது போல தெரியும். இரண்டு கால்களையும் ஒன்றாக தூக்குவதற்கு சில விதங்கள் உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில் தரையில் இரு கைகளையும் நன்கு அழுத்தி கால்களை உயர்த்தவும்.
இரண்டு கால்களிலும் Toe pointing செய்யுங்கள். பத்து விநாடிகளுக்கு இந்த நிலையில் இருந்துவிட்டு கால்களை கீழே இறக்கி விடுங்கள். இதைச் செய்யும் போதே உங்கள் வயிற்றில் உணர்வுகள் ஏற்பட்டு இருக்கும். அது போல வந்தால் நாம் ஆசனத்தைச் சரியாக செய்ய முயற்சிக்கிறோம் என அர்த்தம்.
தரையில் கைகளை அழுத்துவது கடினமாக இருந்தால் உள்ளங்கைகளை மடக்கிவிட்டு உங்கள் பின்புறத்தின் கீழ் வைத்து கால்களை தூக்க முயற்சியுங்கள். சற்று எளிதாக இருக்கும்.
அடுத்ததாக மேலே கீழே என சொல்லிக் கொண்டே ஒரு காலை கீழே வைத்து மற்றொரு காலை மேலே தூக்குங்கள். மேலே கீழே என சொல்லிக் கொண்டு கால்களை மாற்றி மாற்றித் தூங்குங்கள். திடீரென ஸ்டாப் சொல்லி இரு கால்களையும் 40 டிகிரியில் வைத்தால் அது சிரமமாகத் தெரியாது. இயல்பு நிலைக்கு திரும்பி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.
மேலும் படிங்க தைராய்டு பிரச்சினை இருந்தால் சேது பந்தாசனம் செய்யுங்க
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]