Setu Bandhasana Benefits : தைராய்டு பிரச்சினை இருந்தால் சேது பந்தாசனம் செய்யுங்க

சேது பந்தாசனம் செய்வதன் மூலம் தைராய்டு போன்ற பிரச்சினைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம்.

Practise setu Bandhasana

உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் தினமும் ஒரு ஆசனம் பற்றி பகிர்ந்து வருகிறோம். இந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் நாம் அடுத்து பார்க்கவிருக்கும் ஆசனம் சேது பந்தாசனம். இது ஆங்கிலத்தில் BRIDGE POSE என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த ஆசனத்தை செய்யும் போது நமது உடல் பாலம் போல இருக்கும். சேது பந்தாசனம் செய்வதற்கு முன்பாக தளர்வு பயிற்சி செய்ய வேண்டும். அப்போது தான் ஆசனம் செய்வதற்கு எளிதாக இருக்கும்.

setu bandhasana benefits

  • முதலில் தரையில் படுத்துவிட்டு கால்களை பாதியாக மடக்கி இரு கைகளும் குதிகால்களை தொடும்படி வைக்கவும்
  • அடுத்ததாக இடுப்பு பகுதியை மேலே தூக்கி இறக்கவும். இதை போல பத்து முறை செய்ய வேண்டும்.
  • இடுப்பு பகுதியை மேலே தூக்கும் போது மூச்சை உள்ளே இழுத்து கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விடவும்
  • ஆசனத்துடன் சேர்த்து மூச்சு பயிற்சி செய்யும் போது பலன்கள் ஜாஸ்தியாக கிடைக்கும்.
  • தளர்வு பயிற்சி செய்யும் போது கால்களுக்கு இடையே ஒரு அடி இடைவெளி இருக்கட்டும். மீண்டும் பத்து முறை இதேபோல செய்யவும்.
  • காலை நீட்டிவிட்டு தளர்வு அடையவும். இந்த பயிற்சி செய்யும் போது தோள் பட்டையை தூக்க கூடாது.
  • தற்போது சேது பந்தாசனத்தை தொடங்கலாம்.
  • ஆசனம் செய்யும் போது கொழுசு அணியும் இடத்தில் கைகளை கொண்டு பிடித்து கால்களை பாதியாக மடக்கவும்
  • இதை முயற்சிக்கும் போது கவனமாக இருங்கள். தோள்பட்டை, தலை, கழுத்து பகுதி அனைத்துமே கீழே இருக்க வேண்டும்.
  • அப்படியே மூச்சை உள்ளே இழுத்து இடுப்பு பகுதியை மேலே உயர்த்தவும், அதன் பிறகு மூச்சை விட்டு விடுங்கள்.
  • அப்படியே மூச்சை உள்ளே இழுத்து இடுப்பை மேலே தூக்கவும். தூக்கிய பிறகு மூச்சை விட்டு விடுங்கள்,
  • முழங்கை பகுதியை நன்றாக உள்ளே வைத்து இடுப்பு பகுதியை முடிந்தவரை மேலே உயர்த்தவும்.
  • பத்து விநாடிகளுக்குச் செய்து விட்டு பொறுமையாக இடுப்பு பகுதியைக் கீழே இறக்கவும். இயல்பு நிலைக்கு திரும்பித் தளர்வடையவும்
  • ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு வெளியே விடவும். மீண்டும் ஒரு முறை இந்த ஆசனத்தைச் செய்யுங்கள்.
  • கொழுசு அணியும் இடத்தில் கைகளை வைத்து பிடித்து கொண்டு கால்களை தரையில் நன்றாக அழுத்தி வைக்கவும்.
  • மூச்சை உள்ளே இழுத்து கொண்டே இடுப்பு பகுதியைத் தூக்கவும். உங்கள் மார்பக பகுதி தாடையுடன் ஒட்டும்படி இருக்கட்டும்.
  • இடுப்பு பகுதியைக் கீழே இறக்கிவிட்டு கால்களை நீட்டி விடுங்கள்.
  • இந்த ஆசனம் செய்யும் போது முதுகு நன்றாக முன்னோக்கி வளைந்திருக்கும்,
  • எனவே அதற்குச் சற்று எதிராக வேறு ஒரு நிலையைச் செய்யப் போகிறோம்.
  • நேராக உட்கார்ந்தபடி கைகளை மேலே தூக்கி அப்படியே கீழே வாருங்கள். கைகள் மடங்க கூடாது.
  • பத்து விநாடிகளுக்கு இந்த நிலையில் இருக்கவும். பொறுமையாக இயல்பு நிலைக்கு வரவும்.

சேது பந்தாசனம் பலன்கள்

  • இந்த ஆசனத்தை செய்யும் போதே உங்களுக்கு தெரிந்து இருக்கும் மார்கப் பகுதி தாடையுடன் ஒட்டும். தொண்டை பகுதியை அழுத்துவதால் தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு இது மிகவும் நல்லது.
  • மூட்டு வலி இருப்பவர்களுக்கும் இந்த ஆசனம் நல்லது. ஆசனம் செய்யும் போது வலி இருந்தாலும் அதன் பிறகு உரிய பலன்கள் கிடைக்கும்.

மேலும் படிங்க உற்று நோக்கும் திறன் மேம்பட கருடாசனம் செய்யுங்கள்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP