வயிற்று பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு சீரான உணவு பழக்கமும், போதுமான தூக்கமும் அவசியம். இவை இரண்டும் சரியாக இருந்தால் மட்டுமே செரிமானம், மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாது. யோகாசனத்தில் வயிறு சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல ஆசனங்கள் இருக்கின்றன. குறிப்பாக அர்த்த ஹலாசனம் செய்வது வயிற்றுக்கு பல்வேறு நன்மைகளை தரும். அர்த்த என்றால் பாதி என பொருள், ஹலாசனம் என்பது ஒரு வகை ஆசனமாகும். படுத்த நிலை ஆசனமான அர்த்த ஹலாசனம் ஆங்கிலத்தில் Half Plough Pose என்று அழைக்கப்படுகிறது.
- ஆரம்பத்தில் இந்த ஆசனத்தை முழுமையாக செய்ய முயற்சிக்காமல் படிப்படியாக முயற்சியுங்கள்.
- தரையில் நேராக படுத்துக்கொண்டு முதலில் வலது காலை செங்குத்தாக தூக்கவும். அதாவது வலது கால் 90 டிகிரியில் இருக்க வேண்டும். முட்டி மடங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- வலது காலை செங்குத்தாக நிற்க வைப்பதற்கு சிரமமாக இருந்தால் கைகளை கொண்டு கெட்டியாக பிடித்துக் கொள்ளலாம். கால் இயல்பாக நிற்கிறது என்றால் கைகளை பக்கத்தில் வைக்கலாம்.
- இந்த நிலையில் பத்து விநாடிகளுக்கு அப்படியே இருக்கவும். பொறுமையாக வலது காலை கீழே இறக்கி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்.
- இதே போல இடது காலை 90 டிகிரியில் தூக்கவும். மற்றொரு கால் மடங்க கூடாது. அந்தக் கால் தரையில் நேராக இருப்பது அவசியம். இந்த நிலையில் பத்து விநாடிகளுக்கு தொடரவும்.
- ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும். அடுத்ததாக இரண்டு கால்களையும் தூக்க முயற்சிக்கவும். இதற்கு பெயர் தான் அர்த்த ஹலாசனம்.
- கால்களை நேரடியாக மேலே தூக்குவது சிரமமாக இருந்தால் முதலில் மடக்கிவிட்டு அதன் பிறகு 90 டிகிரிக்கு தூக்கவும்.
- கால்களில் நெகிழ்வுத்தன்மை நன்றாக இருந்தால் நேராகவே 90 டிகிரிக்கு தூக்கலாம்.
- முடிந்தவரை கால்கள் 90 டிகிரியில் இருக்கும் போது கைகளால் பிடிக்காதீர்கள்.
- இந்த ஆசனம் செய்யும் போது வயிறு இழுப்பது போல் தெரியும். கால்கள் மேலே இருக்கும் போது அடி வயிற்றில் வித்தியாசத்தை உணர முடியும்.
- கால்களை தூக்குவதே சிரமமாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். சுவற்றின் ஓரத்திற்கு செல்லுங்கள். நன்றாக ஒட்டிக் கொண்டு சுவற்றின் மீது கால்களை வைத்து உடலை நகர்த்தி கொள்ளுங்கள். இதை செய்வதில் சிரமம் இருக்காது.
- 20 நிமிடங்கள் வரை இந்த ஆசனத்தை செய்யலாம்.
அர்த்த ஹலாசனா நன்மைகள்
- அர்த்த ஹலாசனா தொடர்ந்து செய்து வந்தால் வயிறு சமந்தமான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். சிறு குடல், பெருங் குடல் ஆகியவற்றுக்கு இந்த ஆசனம் மிகவும் நல்லது.
- வயிறு உப்புசம், மலச்சிக்கல் பிரச்சினை இருந்தால் இந்த ஆசனம் செய்யலாம். உடனடி தீர்வு கிடைக்கும்.
- அர்த்த ஹலாசனா செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும்.
மேலும் படிங்கஉற்று நோக்கும் திறன் மேம்பட கருடாசனம் செய்யுங்கள்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation