பொதுவாகவே ஆசனங்கள் செய்யும் போது எதேனும் உலோகம் அணிவதை தவிர்க்கவும். ஏனென்றால் ஆசனங்கள் செய்ய கை மற்றும் கால்களை நீட்டும் போது உலோகங்கள் இடையூறாக இருக்கலாம். கடந்த சில நாட்களாக நாங்கள் உடலுக்கு நன்மை தரும் யோகாசனங்கள் குறித்து பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போவது அதோ முக ஸ்வனாசா. இதை ஆங்கிலத்தில் Downward facing dog pose என்று அழைக்கின்றனர். இந்த ஆசனம் செய்வதால் கை, கால்கள் வலுபெறும் மற்றும் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
முதலில் நேராக அமர்ந்து கால்களை நீட்டி அதன் பிறகு இரண்டு கால்களையும் மடித்து கால்கள் மீதே உட்கார முயற்சி செய்யுங்கள். இதற்கு வஜ்ராசனம் எனப் பெயர். இந்த யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் போது சிலருக்கு கடினமாக இருக்கும். அதனால் கால்களுக்கு அடியில் தலையணை வைத்துக் கொள்ளவும் அல்லது குதிகால்கள் மீது தலையணை போட்டுவிட்டு உட்காரவும்.
இயல்பாக ஆசனங்கள் செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும் என சொல்வார்கள். ஆனால் இந்த ஆசனம் அப்படி அல்ல. நாம் சாப்பிட்ட பிறகு செரிமானப் பிரச்சினை இருந்தால் இந்த ஆசனத்தை செய்யலாம். இந்த நிலையில் இருந்து தான் நாம் அதோ முக ஸ்வனாசா செய்யப் போகிறோம்.
மேலும் படிங்கPaschimottanasana Benefits : என்றும் இளமையாக தோன்றிட பச்சிமோத்தாசனம் செய்யுங்கள்
தரையை நோக்கி குணிந்து கைகளை நேராக நீட்டவும். கைகளுக்கு இடையே ஒரு அடி இடைவெளி இருக்க வேண்டும். அதாவது முட்டி போட்ட நிலையில் இருங்கள். வயிற்றை மேலே உயர்த்தியபடி பின்புறத்தை தள்ளி கால்களை நேராக்கவும். உங்களது கால்கள் தரையில் ஒட்டியபடியே இருப்பது அவசியம். அதாவது ஆங்கில எழுத்தான V தலைகீழாக எழுதப்பட்டால் எப்படி இருக்குமோ அப்படி உடலை மாற்ற வேண்டும்.
சில பேருக்கு குதிகால்கள் உடனடியாகத் தரையில் படாது. அவர்கள் முடிந்தவரை கால் விரல்களைத் தரையில் வைத்து பாதம் மட்டும் ஒட்டாத நிலையில் இருக்கட்டும். ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்ய செய்ய பாதமும் தரையுடன் ஒட்டும். தற்போது தலையைக் கீழ் நோக்கிப் பாருங்கள்.
பத்து விநாடிகளுக்கு இந்த ஆசனத்தை செய்துவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்புங்கள். முட்டி போட்டு கைகளைத் தொடை பகுதிக்குக் கொண்டு வந்து வஜ்ராசனம் நிலைக்கு வாருங்கள். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும். மீண்டும் இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்யுங்கள்.
அதோ முக ஸ்வனாசா செய்யும் போது கைகள் நன்றாக நீட்டிக்கப்படுவதால் அவை வலுபெறும். மணிக்கட்டு பகுதியில் சிலருக்கு வலு இருக்காது. ஆனால் இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்யும் போது மணிக்கட்டின் உறுதித்தன்மை அதிகமாகும். குதிகால்களை தரையில் வைக்கும் போது நம்முடைய தசைகள் நன்று நீட்டிக்கப்படும். அதனால் அடுத்தடுத்த ஆசனங்கள் செய்வதற்கும் இது உதவிகரமாக இருக்கும். அதோ முக ஸ்வனாசா செய்வதால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகும்.
மேலும் படிங்கGarudasana benefits : உற்று நோக்கும் திறன் மேம்பட கருடாசனம் செய்யுங்கள்
முதுகில் அறுவை சிகிச்சை செய்திருக்கும் நபர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. அதிக முதுகு வலி உடையவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாகக் கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. குழந்தையை வயிற்றில் சுமக்கும் போது தலைகீழாக V வடிவத்தில் நிற்பது தவறாகும். இதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation