நடைபயிற்சி செல்வது உடல் நலனுக்கு மிகவும் நல்லது. யதார்த்தமான நடைபயிற்சி, வேகமாக நடப்பது, கையை வீசி விறுவிறுவென நடைபயிற்சி செல்வது என அனைத்துமே உடலுக்கு நன்மைகளை தரும். இருசக்கர வாகன உரிமம் பெறுவது 8 போட்டு காட்டுவோம். 8 எண் வடிவத்தில் வாகனம் ஓட்டுவது போல 8 எண் வடிவத்தில் நடைபயிற்சி செல்வது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். 8 எண் வடிவ பாதையில் நடைபயிற்சி செல்வதால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் பார்ப்போம். 8 எண் வடிவ பாதை பல பூங்காக்களில் உள்ளது.
8 எண் வடிவ நடை பயிற்சி
8 எண் வடிவ நடைபயிற்சியை காலை, மாலை அல்லது வெறும் வயிற்றில் செய்யலாம். உங்கள் வீட்டின் அருகில் 8 எண் வடிவ நடைபாதை இல்லையென்றால் காலியான இடத்தில் இதை நாமே உருவாக்கலாம். கிழக்கு நோக்கி மேற்கும், மேற்கு நோக்கி கிழக்கும் தெற்கு திசையில் பத்து அடி இடைவெளி விட்டு 8 வரையவும். இதில் 8 எண் வடிவில் நடைபயிற்சி செய்யலாம். வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி clockwise திசையில் (கடிகார முள்) மற்றும் Anti clockwise (எதிரெதிர்) திசையில் 15 நிமிடங்களுக்கு நடக்கவும்.
நடக்கும் போது 8 எண் வடிவ பாதையில் இருந்து விலகக் கூடாது. முக்கியமாக செருப்பு அணிந்து நடைபயிற்சி செல்லக் கூடாது. ஏனெனில் உள்ளங்கை மற்றும் கால் பாதத்தில் அழுத்தம் ஏற்பட்டு உடலில் உள் உறுப்புகள் தூண்டிவிடப்படும்.
8 எண் வடிவ நடைபயிற்சி நன்மைகள்
எடை இழப்புக்கு 8 எண் வடிவ நடைபயிற்சி
8 எண் வடிவ பாதையில் நடப்பது உடல் எடையை இழப்பதற்கு உதவும். சாதாரண நடைபயிற்சியை விட 8 எண் வடிவ பாதையில் நடப்பது அதிக வியர்வையை வெளியேற்றும். இந்த பாதையில் நடப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும். உடலில் கொழுப்புகள் எரிக்கப்பட்டு ஆற்றல் கிடைப்பதால் உடல் எடை குறைகிறது.
8 எண் வடிவ பாதையில் நடப்பதால் இடுப்பு, வயிறு பகுதி முறுக்கப்படும். உடலின் எல்லா உறுப்புகளுக்கும் தூண்டிவிடப்படுகிறது. 30 நிமிடங்கள் முடிவில் 5 கிலோ ஆக்ஸிஜன் வரை உள்ளே இழுத்திருப்பீர்கள். இதன் காரணமாக உடலில் ஆற்றல் அதிகரித்திருக்கும்.
மேலும் படிங்கவயிற்று பகுதி கொழுப்பை கரைத்திட 15 நாட்களுக்கு இந்த 5 யோகா ஆசனங்கள் பயிற்சி செய்யுங்க
கால் வலிக்கு தீர்வு
கால் வலி இருந்தால் நடப்பதற்கு சோம்பேறித் தனமாக இருக்கும். இந்த 8 எண் வடிவ நடைபயிற்சி செல்ல ஆரம்பித்த பிறகு கீல்வாதம், மூட்டு வலி, கால் வலி எதுவாக இருந்தாலும் பறந்துபோகும். சுழற்சியில் நடப்பது நெகிழ்வுத்தன்மையை கொடுக்கும்.
காது கேட்கும் திறன் அதிகரிக்கும். தலைவலி, செரிமான கோளாறு, உடல் பருமன், உடலில் இரத்த சர்க்கரை குறைக்க, பாத வெடிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு 8 எண் வடிவ நடைபயிற்சி தீர்வாக அமையும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation