வயிற்று பகுதி கொழுப்பை கரைத்திட 15 நாட்களுக்கு இந்த 5 யோகா ஆசனங்கள் பயிற்சி செய்யுங்க

வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைப்பது சற்று சவாலான காரியம் ஆகும். யோகா ஆசனம் பயிற்சியின் மூலம் கொழுப்பை குறைக்க முயற்சித்தால் உடனடி பலன் பெறலாம். புஜங்காசனம், தனுராசனம், கும்பகாசனம், நவுகாசனம், உஸ்ட்ராசனம் ஆகிய 5 ஆசனங்கள் உதவும்.
image

யோகக் கலை மனித வாழ்வியலுக்கு அர்த்தம் கற்பிக்ககூடிய கலையாகும். யோகா பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். யோகாசனம் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், மன அழுத்தத்தை குறைக்கும். உடல் எடை அதிகரிப்புக்கு மன அழுத்தம் முக்கிய காரணமாகும். குறிப்பாக வயிற்று பகுதி கொழுப்பு. யோகா பயிற்சி தொடர்ந்து செய்வதால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான உடல் எடையில் தொடர முடியும். வயிற்று பகுதி கொழுப்பை கரைத்திட இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஆசனங்களை பயிற்சி செய்யவும்.

naukasana pose

வயிற்று கொழுப்பை குறைக்கும் ஆசனங்கள்

புஜங்காசனம்

  • இந்த யோகாசனம் பார்ப்பது மலைப்பாம்பு படம் எடுப்பது போல் இருக்கும்.
  • முதலில் தரையில் படுத்துக்கொள்ளவும். அடுத்ததாக கைகளை மார்பு பகுதிக்கு நேராக வைத்து அழுத்தம் கொடுத்து வயிற்று பகுதி முதல் கழுத்து பகுதி வரை 90 டிகிரிக்கு உடலை வளைக்கவும்.
  • ஆழ்ந்த மூச்சை இழுத்து இதே நிலையில் 30 விநாடிகளுக்கு தொடர்ந்து அதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் போது மூச்சை வெளியே விடவும்.

தனுராசனம்

  • தரையில் படுத்துவிட்டு அதன் பிறகு இரண்டு கைகளையும் பின்நோக்கி கொண்டு சென்று வலது மற்றும் இடது கால்களை படிப்படியாக முன்னே கொண்டு வந்து கொலுசு அணியக்கூடிய மணிக்கட்டு பகுதியில் பிடிக்க வேண்டும்.
  • இப்போது லேசாக மூச்சை உள்வாங்கிக் கொண்டே நெஞ்சை மற்றும் தொடை பகுதியை மேலே உயர்த்த வேண்டும். இதை செய்யும் போது முழங்கை வளையக் கூடாது. 20 விநாடிகளுக்கு இதே நிலையில் தொடரவும்.

கும்பகாசனம்

  • புஷ் அப் எடுப்பது போல் இந்த ஆசன நிலை இருக்கும். புஷ் அப் எடுக்கும் போது தரைக்கும் மார்பு பகுதிக்கும் சற்று இடைவெளி இருக்கும்.
  • கும்பகாசனம் செய்கையில் கைகளை மடக்கி கீழே கொண்டு வரக்கூடாது. உடலை தாங்கி பிடிக்கும் மொத்த ஆற்றலையும் கைகளுக்கு கொடுத்தபடி 35 டிகிரியில் நிற்க வேண்டும்.

நவுகாசனம்

  • இது படகு நிலை என்றும் அழைக்கப்படுகிறது. உடலை V வடிவத்திற்கு மாற்றுவதே இந்த ஆசனம். இடுப்பு பகுதி மட்டுமே தரையில் இருக்க வேண்டும்.
  • 60 விநாடிகளுக்கு இதே நிலையில் தொடர்ந்து கைகளையும், கால்களையும் கீழே இறக்கிய பிறகு மூச்சை விடவும்.

உஸ்ட்ராசனம்

  • இந்த ஆசனத்திற்கு மற்றொரு பெயர் ஒட்டக நிலை. தரையில் முட்டி போட்ட படி தலையை நோக்கு சாய்த்து இருகைகளால் மணிக்கட்டு பகுதியை பிடிக்க வேண்டும்.
  • முதுகை வில் போல் வளைத்து 20-30 விநாடிகளுக்கு இதே நிலையில் தொடரவும்.

மேலும் படிங்கயோகா தினம் 2025 : மனித வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும் யோகக் கலை

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP