யோகா நம் பாரத தேசத்தின் பொக்கிஷம். இந்திய நாட்டில் இருந்து உலக நாடுகளுக்கு யோகா பரவியது. யோகாசனம் மிகவும் பழமையானது. உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் யோகா பயனளிக்க கூடியது. சில யோகாசனங்கள் பார்ப்பதற்கு எளிதாக தெரிந்தாலும் அவற்றை படிப்படியாகவே முயற்சிக்க முடியும். உடல் எடையைக் குறைக்க பலரும் ஜிம் செல்கிறோம். யோகாசனம் தெரிந்தால் எந்தவித உபரகணமும் இன்றி உடல் எடையைக் குறைக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. யோகாசனம் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் யோகா செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி இந்த நாளில் விவரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள், யோகாசனத்தை வாழ்க்கையுடன் தொடர்புபடுத்துவது எவ்வளவு நல்லது என தெரிந்துகொள்வோம்.
சர்வதேச யோகா தினம் 2025
யோகா தினம் 2025 கருப்பொருள்
இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் "ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா" ஆகும். 2025ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் 11வது ஆண்டாகும். சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு. இந்தியாவில் யோகா சங்கம் என்ற பெயரில் ஒரு லட்சம் இடங்களில் மக்களை திரட்டி யோகா செய்ய வைக்க திட்டமிட்டுள்ளனர். யோகா சங்கம் போல் 10 முக்கிய நிகழ்வுகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன. யோகா பந்தன், யோகா பூங்கா, யோகா மகாகும்ப், சம்யோகா உட்பட ஒன்பது பெயர்களில் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது.
யோகா தின வரலாறு & முக்கியத்துவம்
பிரதமர் மோடியின் அறிவுறுத்தலால் 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டத்தில் ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. டிசம்பர் 11ஆம் தேதி 2014 ஐக்கிய நாடுகளின் 69வது பொதுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த கூட்டத்தில் யோகா என்பது ஒரு பயிற்சி மட்டுமல்ல மனித வாழ்வியல், உலகம் மற்றும் இயற்கையை பற்றி அறிவதற்கான வழி என பிரதமர் மோடி பேசினார்.
அதை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி புது டெல்லியில் முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் இரண்டு கின்னஸ் சாதனைகள் படைக்கப்பட்டன. 35 ஆயிரத்து 985 பேர் அந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் 84 நாடுகளை சேர்ந்த பொதுமக்களும், பிரதிநிதிகளும் அடங்குவர். சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் முதன்மை நோக்கம் யோகாவின் பயன்களை உலகறிய செய்வதாகும். ஒரே ஒரே யோகாசனம் கற்று அதை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation