அழகை பராமரிப்பது சுலபம், ஆனால் ஆரோக்கியத்தை பராமரிப்பது சற்று கடினம் தான். எடை அதிகரிப்பதும், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதும் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. நல்ல ஃபிட் ஆன உடல், நல்ல ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாகும்.
உங்கள் இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைத்து, சரியான உடல் வடிவம் பெற பின்வரும் பயிற்சிகள் உங்களுக்கு உதவலாம். இந்த பயிற்சிகள் பற்றிய தகவல்களை மருத்துவர் ஹித்தேஷ் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு கைப்பிடி அளவு கிட்னி பீன்ஸ் சாப்பிடுங்க, ஆயுசுக்கும் ஆரோக்கியமாக வாழலாம்!
இடுப்பு கொழுப்பை குறைக்க சைடு லெக்(Side leg exercise)
இந்த பயிற்சியை செய்து வந்தால் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பு குறைவதோடு மட்டுமின்றி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்.
செய்வது எப்படி?
- சைடு லெக் பயிற்சியை செய்வதற்கு முதலில் யோகா மேட்டை விரித்து நேராக படுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு புறமாகத் திரும்பி, கால்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்துக் கொள்ளவும். உங்கள் கைகளைக் கொண்டு தலையை பிடித்துக் கொள்ளலாம்.
- இப்போது கால்களை மேலும், கீழும் மற்றும் இடது, வலது புறத்திலும் அசைக்க வேண்டும்.
- இதை உங்களால் முடிந்தவரை பலமுறை பயிற்சி செய்யலாம்.
இடுப்பு கொழுப்பை குறைக்க டம்பெல் சைடு லேட்டரல் ரைஸ்(Dumbbell side lateral raise exercise)
இந்த பயிற்சியானது கொழுப்பை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைத்தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் தொப்பை குறைவதுடன் நல்ல உடல் வடிவத்தையும் பெறலாம். இந்த பயிற்சியை செய்வதற்கு டம்பெல் பதிலாக இரண்டு கடினமான பொருட்களையும் பயன்படுத்தலாம்.
செய்வது எப்படி?
- நேராக நின்று, உங்கள் இரு கைகளிலும் டம்பெல்ஸை பிடித்துக் கொள்ளவும்.
- இப்போது உங்களுடைய கைகளை மெதுவாக மேலே உயர்த்தவும், இரு கைகளும் ஒரே நேர் கோட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
- பின்னர் மெதுவாக டம்பெல்ஸை கீழே இறக்கவும்.
- இந்த உடற்பயிற்சியை 20 முறை வரை செய்யலாம்.
இடுப்பு கொழுப்பை குறைக்க குதிகால் தொடுதல் பயிற்சி(Heel touch exercise)
உங்களுடைய இடுப்பு பகுதியில் அதிகமாக கொழுப்பு சேர்ந்திருந்தால் இந்த குதிகால் தொடுதல் பயிற்சியை தவறாமல் செய்யுங்கள். இது உங்கள் இடுப்புக்கு நல்ல வடிவத்தை கொடுப்பதுடன் உடலுக்கு நல்ல நெகிழ்வு தன்மையையும் கொண்டு வருகிறது. இந்த பயிற்சியின் எளிமையான செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
செய்வது எப்படி ?
- முதலில் நேராக படுத்துக் கொள்ளவும்.
- பின்னர் உங்கள் முழங்கால்களை வளைத்து, பாதங்களை தரையில் ஊன்றிய படி வைத்து கொள்ளவும்.
- இப்போது கழுத்தை சற்று உயர்த்தி உங்கள் இரு கைகளாலும் கணுக்கால்களை தொட முயற்சி செய்யவும்.
- இந்த பயிற்சியை 20 முறை பொறுமையாக செய்யவும். தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக சில நாட்களிலேயே சிறந்த பலன்களை பெறலாம்.
உங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் நிபுணரின் வழிகாட்டுதலுடன் இந்த பயிற்சிகளை செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை வேகமாக குறைக்க, இதை ட்ரை பண்ணுங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation