சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய இந்த கிட்னி பீன்ஸை ராஜ்மா என்றும் அழைக்கிறார்கள். இதை குழம்பு முதல் கூட்டு வரை பலவிதமாக சுவையாக சமைத்து சாப்பிடலாம். தினமும் ஒரு கைப்பிடி அளவு கிட்னி பீன்ஸை வேக வைத்து சுண்டலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இன்றைய பதிவில் கிட்னி பீன்ஸின் நன்மைகளைப் பார்க்க போகிறோம். இதன் நன்மைகளை தெரிந்தால் கிட்னி பீன்ஸை பிடிக்காதவர்கள் கூட இனி அதை சாப்பிட தொடங்குவார்கள். இதில் இரும்புச் சத்து தாமிரம், ஃபோலேட், மெக்னீசியம், கால்சியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: தேனா, வெல்லமா அல்லது நாட்டு சர்க்கரையா? ஆரோக்கியத்திற்கு எது நல்லது தெரியுமா?
கிட்னி பீன்ஸ் சாப்பிட்டால் எடை குறையுமா? ஆம், நீங்களும் உங்களுடைய உடல் எடையை குறைக்க விரும்பினால் நார்ச்சத்து நிறைந்த இந்த கிட்னி பீன்ஸை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. மேலும் இதை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டாலே போதும், உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு பசியுணர்வே இருக்காது. கிட்னி பீன்ஸை கொண்டு புலாவ் அல்லது குழம்பு செய்து சாப்பிடலாம். இதை உங்கள் உணவில் சேர்த்து வர உடல் பருமனை குறைக்கலாம்.
கிட்னி பீன்ஸில் ஏராளமான அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளன. இவ்விரண்டு ஊட்டச்சத்துக்களும் எலும்புகளை வலுப்படுத்த மிகவும் அத்தியாவசியமானவை. எலும்புகளை வலுவாக வைத்திருக்க தினமும் ஒரு கைப்பிடியளவு கிட்னி பீன்ஸை சாப்பிட முயற்சி செய்யலாம்.
மலச்சிக்கலை போக்க கிட்னி பீன்ஸ் உதவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வயிற்றை சுத்தம் செய்யவும், மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவுகின்றன. இதனை சரியான அளவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவுகளையும் குறைக்கலாம். இதைத்தவிர சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும், செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கும் தினமும் ஒரு கைப்பிடி அளவு கிட்னி பீன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
கிட்னி பீன்ஸில் துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின் B6, ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. இதைத் தவிர கிட்னி பீன்ஸை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் ஹீமோகுளோபின் அளவுகளையும் பராமரிக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: பல நோய்களுக்கு மருந்தாகும் கொய்யா இலைகளை, எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]