பலருக்கும் இனிப்பான உணவுகள் மீது விருப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய சர்க்கரையை சாப்பிடுவதால் உடல் பருமன் முதல் சர்க்கரை நோய் வரை ஏராளமான பாதிப்புகள் ஏற்படலாம். இக்காரணத்தினால் வெள்ளை சர்க்கரையை குறைவாக அல்லது முற்றிலும் தவிர்க்கும் படி ஆரோக்கிய நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களிடையே வெள்ளை சர்க்கரை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக தேன், வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரையை பயன்படுத்தவும் தொடங்கியுள்ளனர்.
வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடுகையில் இவை மூன்றுமே ஆரோக்கியத்திற்கு நல்லது. இவை மூன்றிலும் எவ்வளவு கலோரிகள் உள்ளன மற்றும் எது ஆரோக்கியமானது என்பது குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான ராதிகா கோயல் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: புளிக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம், புளியங்கொட்டையில் இவ்வளவு நன்மைகளா!
இயற்கை சுவையூட்டியான தேனை காலம் காலமாக பயன்படுத்தி வருகிறோம். இதில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இது எளிதாக ஜீரணமாகும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
நாட்டு சர்க்கரையை கரும்பு சாறிலிருந்து தயாரிக்கிறார்கள். சுத்திகரிக்கப்படாத இந்த சர்க்கரை வெள்ளை சர்க்கரையை விட ஆரோக்கியமானது.
வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடுகையில் இதில் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளன. இருப்பினும் வெல்லத்தை அதிகமாக சாப்பிடும் பொழுது உடல் எடை அதிகரிக்கலாம். வெல்லம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், இயற்கையான முறையில் இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும்.
தேன், வெல்லம், நாட்டு சர்க்கரையை என எல்லா வகையான இனிப்பு சுவையூட்டிகளிலும் கலோரிகள் உள்ளன. இந்நிலையில் நீங்கள் எந்த இனிப்பை தேர்வு செய்கிறீர்கள் என்பதை விட, நீங்கள் எவ்வளவு எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதே இதன் விளைவுகளை தீர்மானிக்கிறது. இவற்றை அளவோடு எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த இயற்கையான இனிப்பு சுவையூட்டிகளில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன, இவை ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன. இருப்பினும் இதன் சிறந்த பலன்களை பெற சரியான அளவுகளில் எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்
இந்த பதிவும் உதவலாம்: உணவில் உளுந்து சேர்த்துக்கோங்க, உடல் பலத்துடன் ஆரோக்கியமாக வாழலாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]