
இட்லி, தோசை, வடை, களி, கஞ்சி என பல தென்னிந்திய உணவுகளில் உளுந்து பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கின்றன. இதில் அதிக அளவு புரதமும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பின்வரும் நன்மைகளை பெறலாம்.
உளுத்தம் பருப்பில் குறிப்பாக தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்தில் ஏராளமான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை உங்கள் தினசரி உணவு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளும் பொழுது குடல் இயக்கம் எளிதாகும். இது சீரான செரிமான செயல்முறை மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தையின் உடல் எடை அதிகரிக்க, ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை செய்யும் ஹோம்மேட் பவுடர்!
மலம் கழிப்பது சுலபமானால் நாள்பட்ட செரிமான பிரச்சனைகள் மற்றும் குடல் சார்ந்த பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் வலுப்பெறுவதுடன் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, உப்புசம் போன்ற பல வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் தவிர்க்க முடியும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உளுந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதன் மூலம் அதிகமாக சாப்பிட்டுவதை கட்டுப்படுத்தலாம்.
உளுந்தில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரையின் அளவுகளை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றன. டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உளுந்தை தங்கள் அன்றாட உணவில் சேர்த்து வர திடீரென உயரும் இரத்த சர்க்கரையின் அளவுகளை தடுக்கலாம்.
இது இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம், செரிமான மண்டலத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸை உறிஞ்சி வெளியேற்ற உதவுகிறது. மேலும் உளுத்தம் பருப்பில் உள்ள நார்ச்சத்து தேவையான அளவு ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. இரத்த சர்க்கரை மற்றும் குளுக்கோஸ் அளவுகளை சீராக வைத்துக் கொள்ள சர்க்கரை நோயாளிகள் உளுந்தை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உளுத்தம் பருப்பில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. உளுத்தம் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பின் அடர்த்தியும் கணிசமாக அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலும்பின் அடர்த்தி அதிகமானால் எலும்புகளும் வலுவாக இருக்கும். எனவே உறுதியான வலுவான எலும்புகளைப் பெற உளுந்தை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: தொப்பையை குறைக்க உதவும் 4 நட்ஸ், ஒருமுறை இப்படி சாப்பிட்டு பாருங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]