Burn Belly Fat : தொப்பையை குறைக்க உதவும் 4 நட்ஸ், ஒருமுறை இப்படி சாப்பிட்டு பாருங்க!

தொப்பையை குறைக்க வேண்டுமா? நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த 4 நட்ஸ் வகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து பயன்பெறுங்கள்…

nuts for weight loss expert tips

ஆரோக்கியமான முறையில் தொப்பையை குறைப்பதற்கான வழியை தேடுகிறீர்களா? உங்களுக்கு இன்றைய பதிவு நிச்சயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கான சிறந்த வழியை டாக்டர் நிதிகா அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

உடல் எடையை குறைக்க பல வழிகள் இருக்கலாம், உணவு கட்டுப்பாடு முதல் கடுமையான உடற்பயிற்சி வரை எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை செய்து வருகின்றனர். இதற்கு கடின உழைப்பும், பொறுமையும், விடா முயற்சியும் அவசியம். எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டு ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை தங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நட்ஸ் வகைகள் சரியான தேர்வாக இருக்கும். இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. நீங்கள் இதுவரை டயட்டில் நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், இதற்கான முயற்சியை இன்றே தொடங்கலாம். இதற்கு உதவக்கூடிய நான்கு நட்ஸ் வகைகளை இன்றைய பதிவில் காணலாம்.

பாதாம்

nuts for weight loss badam

இது ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாகும். இருதய ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் எடை இழப்பு வரை பாதாமில் நன்மை பயக்கக்கூடிய சத்துக்கள் ஏராளமாக உள்ளன. நார்ச்சத்து மற்றும் புரதம் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

புரதம் நிறைந்த பாதாம் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இதை சரியான அளவுகளில் எடுத்துக்கொண்டால் உடல் எடை நிச்சயமாக குறையும். சிறந்த பலன்களைப் பெற பாதாமை ஊற வைத்து சாப்பிடலாம்.

பிரேசில் நட்ஸ்

இதில் தாவர அடிப்படையிலான புரதம் நிறைந்துள்ளது. விடாப்படியான தொப்பை கொழுப்பை குறைக்க இது உதவும். மேலும் பிரேசில் நட்ஸில் குறைந்த அளவு கலோரி மட்டுமே உள்ளது. இதை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

எடை இழப்புக்கு உதவக்கூடிய நார்ச்சத்தும், புரதமும் பிரேசில் நட்ஸ்களில் அதிகமாக உள்ளன. மேலும் இதில் உள்ள செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகின்றன.

அக்ரூட் பருப்பு

இதில் உள்ள நல்ல கொழுப்பு இதய ஆரோக்கியத்திற்கும் எடை இழப்புக்கும் நன்மை பயக்கின்றன. இவை பசி உணர்வை கட்டுப்படுத்த உதவுகின்றன.

அக்ரூட் பருப்புகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புரதம், வைட்டமின் A, D, மெக்னீசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் எடையை குறைக்கின்றன. இதில் உள்ள சத்துக்கள் இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் மற்றும் வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கவும் உதவுகின்றன.

பிஸ்தா

nuts for weight loss pista

சுவை நிறைந்த இந்த பிஸ்தா பருப்புகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை தினமும் சாப்பிட்டு வர தொப்பை மற்றும் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். இதில் உள்ள புரதம் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதன் மூலம் தேவையற்ற உணவுகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்தலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தை குறைக்கவும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகின்றன.

இதில் அதிக அளவு கலோரி இருந்தாலும், நல்ல கொழுப்புகள் உள்ள இந்த நட்ஸ்களை சரியான அளவுகளில் தினமும் சாப்பிட்டு வந்தால் எடையை குறைக்கலாம்.

தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் கலவைகளை எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை செய்தால் எடை நிச்சயம் குறையும்.

இந்த பதிவும் உதவலாம்: பாகற்காய் ஜூஸ் குடித்தால், உடலில் இந்த 5 அதிசய மாற்றங்களை காணலாம்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP