பாகற்காய் என்ற வார்த்தையை கேட்டவுடன் பலரும் முகம் சுழிப்பார்கள். இதில் எவ்வளவு கசப்பு உள்ளதோ, அதே அளவிற்கு நன்மைகளும் உள்ளன. பாகற்காய் ஜூஸை குடித்து வந்தால் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பதுடன், சரும பிரச்சனைகளையும் நீக்கலாம். மேலும் கோடை காலத்தில் பாகற்காய் ஜூஸ் குடிக்கும்படி நிபுணர்களும் பரிந்துரை செய்கிறார்கள். இதனை குடிக்கும் பொழுது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
பாகற்காய் ஜூஸின் நன்மைகளை உணவியல் நிபுணரான சிம்ரன் சைனி அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம். பாகற்காய் ஜூஸில் பொட்டாசியம், இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. இது வைட்டமின் C இன் சிறந்த ஆதாரமாகும். இதை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி வலுபெறும். பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படக்கூடிய ஐந்து மாற்றங்களை இன்றைய பதிவில் காணலாம்…
இந்த பதிவும் உதவலாம்: 30 நாட்களுக்கு இதை செய்து பாருங்கள், உடல் எடையை விரைவில் குறைக்கலாம்!
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் பாகற்காயும் ஒன்று. இது இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதற்கான இயற்கை வழியாகும். சிறந்த பலன்களைப் பெற காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.
குடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், கல்லீரல் சார்ந்த பிரச்சினைகளை தடுக்கவும் பாகற்காய் ஜூஸ் குடிக்கலாம். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கல்லீரலின் சேதத்தை தடுக்கின்றன மற்றும் கல்லீரலின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றன.
பாகற்காய் ஜூஸை குடித்து வந்தால் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பதுடன் உடல் பருமனையும் குறைக்கலாம். இது இன்சுலினை தூண்டி உடலில் கொழுப்பு செய்வதை தடுக்கிறது. இதில் குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடையை குறைப்பதற்கு ஏற்றது. இது கொழுப்பை வளர்சிதை மாற்றம் செய்ய தூண்டுகிறது. மேலும் 100 மில்லி பாகற்காய் ஜூஸில் வெறும் 17 கலோரிகள் மட்டுமே உள்ளன. எனவே இது உடல் எடையை குறைப்பதற்கு ஏற்ற ஒரு சிறந்த பானமாகும்.
மாரடைப்பின் அபாயத்தை குறைக்கவும், இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பாகற்காய் ஜூஸ் குடிக்கலாம். இதில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவுகளை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. பாகற்காயில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சிக் கொள்ளும். இதன் மூலம் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
இதில் உள்ள வைட்டமின் A மற்றும் C வயது முதிர்வின் அறிகுறிகளான சுருக்கம் மற்றும் தளர்ந்த சருமத்தை தடுக்கின்றன. இது தீங்கு விளைவிக்கும் UV கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். இதிலுள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட் பண்புகள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்திகரித்து, சரும பிரச்சனைகளை சரி செய்ய உதவுகின்றன. இதை குடித்து வந்தால் பருக்கள், சரும பிரச்சனைகள் மற்றும் தடிப்புகளை குணப்படுத்தலாம்.
பாகற்காய் ஜூஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது இருப்பினும் இதை சரியான அளவுகளில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு உணவு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: உடலுக்கு பல அபார நன்மைகளை தரும் பலாக்கொட்டை!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]