பலாப்பழத்திற்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உண்டு. அப்படியே சாப்பிட்டாலும் சரி, அல்லது சமைத்து சாப்பிட்டாலும் சரி பலாப்பழங்களை திகட்ட திகட்ட ரசித்து சாப்பிடலாம். பலா பழங்களைப் போலவே பலாக்கொட்டையிலும் ஏராளமான நன்மைகள் உள்ளன. இதனை குழம்பு, வறுவல் செய்து சாப்பிட்டால், சுவை அட்டகாசமாக இருக்கும். ஆனால் பலரும் இவை சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல என்று எண்ணி தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
பலாக்கொட்டைகளை தாராளமாக சாப்பிடலாம், இவை உடல் உறுப்புகளுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கின்றன. இதன் நன்மைகளை இன்றைய பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மூக்கை நல்ல கூர்மையா ஸ்லிம்மாக வைத்திருக்க, இந்த பயிற்சிகளை செய்யுங்கள்!
இன்றைய சூழலில் போன் அல்லது லேப்டாப்பை அதிகமாக பார்த்து வேலை செய்ய வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் கண் பார்வையை மேம்படுத்தவும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். பலாக்கொட்டையில் உள்ள வைட்டமின் A கண் பார்வையை மேம்படுத்த உதவும். இதுபோன்ற வைட்டமின் A நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பார்வை குறைபாடுகளை தடுக்கலாம்.
முகச் சுருக்கங்கள் மற்றும் தளர்வான சருமத்தை சரி செய்யவும், வயது முதிர்வும் அறிகுறிகளை குறைக்கவும் பலாக்கொட்டையை பயன்படுத்தலாம். சுருக்கங்கள் நீங்கி இளமையான சருமம் பெற பழம் கொட்டை உதவும்.
உடலுக்கு ஆக்சிஜனை முறையாக விநியோகம் செய்ய இரத்த சிவப்பணுக்கள் தேவைப்படுகின்றன. இரும்புச்சத்து குறைபாட்டால் உடலில் இரத்த சோகை ஏற்படுகிறது. இது ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. பலாக்கொட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகின்றன. இதைத்தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தியும் உடலின் இரத்த சிவப்பணுக்களும் அதிகரிக்கும்.
நோய் கிருமிகளின் தாக்கத்திலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது அவசியம். நிலையில் நோய்கள் அண்டாமல் இருக்க ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் நிறைந்த பலாக்கொட்டைகளை சாப்பிடலாம். இதில் உள்ள புரதம் பல நோய் தாக்குதல்களில் இருந்து உடலை பாதுகாப்பதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை வேகமாக குறைய, இந்த ஒரு ஆயுர்வேத மூலிகை போதும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]