உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களுக்கு கூட இந்த சேனைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். நான் வெஜ் உணவுக்கு நிகரான சுவையுடைய இந்த சேனைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்துள்ளன. இதை சுத்தம் செய்யும் பொழுது, கைகளில் அரிப்பு ஏற்படும் என்பதால் பலரும் இந்த காய்கறி சமைப்பதை தவிர்க்கின்றனர். கைகளில் தேங்காய் எண்ணெயை தாராளமாக தடவிக் கொண்டு கிழங்கை நறுக்கினால் அரிப்பை தடுக்கலாம். மேலும் சேனைக்கிழங்கு முழுவதுமாக சுத்தம் செய்து முடிக்கும் வரை தண்ணீரில் கை வைக்காமல் இருந்தால் அரிப்பு பரவாமல் இருக்கும்.
சுவை நிறைந்த இந்த சேனைக்கிழங்கை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகளை பெற முடியும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவது முதல் புற்றுநோயை தடுப்பது வரை சேனைக்கிழங்கு தரும் ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் காணலாம்…
இந்த பதிவும் உதவலாம்: உடலுக்கு பல அபார நன்மைகளை தரும் பலாக்கொட்டை!
ஆய்வுகளின் படி சேனைக்கிழங்கில் உள்ள சேர்மங்கள் நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
சேனைக்கிழங்கில் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. இதைத்தவிர இதில் வைட்டமின் C, தாமிரம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
மெனோபாஸ் அறிகுறிகளை சமாளிக்க சேனைக்கிழங்கு சாப்பிடலாம். ஒரு ஆய்வின்படி மாதவிடாய் நின்ற 24 பெண்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை அரிசி உணவிற்கு பதிலாக சேனைக்கிழங்கு உணவாக கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக அவர்களின் இரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு 26 சதவீதம் அதிகரித்தது. பொதுவாக மெனோபாஸ் காலகட்டத்தில் குறையும் இந்த ஹார்மோன்கள், சேனைக்கிழங்கை எடுத்துக் கொள்ளும் பொழுது அதிகரித்து காணப்பட்டன. இது மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் அதிக நன்மைகளை தரும்.
சேனைக்கிழங்கு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இது செரிமான என்சைங்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் செரிமானம் எளிதாகும். மேலும் இதன் விளைவாக குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. இருப்பினும் இதை உறுதிப்படுத்த மேலும் சில ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
சேனைக்கிழங்கை சாப்பிடுவது பசி உணர்வை கட்டுப்படுத்தி எடை இழப்புக்கு உதவுகிறது. இதை சாப்பிடும் பொழுது நீங்கள் நீண்ட நேரத்திற்கு நிறைவாக உணர்வீர்கள்.
இந்த பதிவும் உதவலாம்: 30 நாட்களுக்கு இதை செய்து பாருங்கள், உடல் எடையை விரைவில் குறைக்கலாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]