herzindagi
weight gain powder for kids

Weight Gain Powder : குழந்தையின் உடல் எடை அதிகரிக்க, ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை செய்யும் ஹோம்மேட் பவுடர்!

உங்கள் குழந்தையுடைய எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க வேண்டுமா? நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த ஹோம்மேட் பவுடரை குழந்தைக்கு செய்து கொடுக்கலாம்…
Editorial
Updated:- 2023-08-14, 18:30 IST

குழந்தைக்கு சளி பிடிக்காமல், காய்ச்சல் வராமல் என்றுமே ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோருடைய விருப்பம். விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு உணவின் மீது விருப்பம் குறைகிறது. இதனால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக அவர்கள் எடை குறைந்து காணப்படலாம். இந்நிலையில் அவர்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்யவும், எடையை அதிகரிக்கவும் ஒரு ஆரோக்கியமான பவுடரை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். இது குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் ரமிதா கௌர் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

குழந்தை ஒல்லியாக இருப்பதை நினைத்து இனி கவலை கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த பவுடர் உங்கள் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும். இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது காணலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: புற்றுநோயை தடுப்பது முதல் எடை இழப்பு வரை சேனைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகளா!

 

தேவையான பொருட்கள்

  • பாதாம் - 20 கிராம் 
  • சூரியகாந்தி விதை - 20 கிராம் 
  • பூசணி விதை - 20 கிராம் 
  • எள்ளு - 20 கிராம் 
  • ஆளி விதை - 20 கிராம் 

செய்முறை

  • முதலில் எல்லா பொருட்களையும் குறைந்த தீயில் வைத்து, எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக் கொள்ளவும். 
  • சூடு தணிந்த பிறகு இதை பொடித்து காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ளலாம். 
  • இதை தயிர், சப்பாத்தி, கஞ்சி, ஷேக் அல்லது பாலுடன் கலந்து உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். 
  • இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் நன்மைகளையும் தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள். 

பாதாம் 

weight gain badam

இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாதாமில் உள்ள கலோரிகள், புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான  கொழுப்புகள் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன. இதைத்தவிர பாதாமில் பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் E போன்ற சத்துக்களும் உள்ளன. 

சூரியகாந்தி விதை  

உடல் எடையை அதிகரிக்க சூரியகாந்தி விதையை எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள கொழுப்பு, துத்தநாகம், நார்ச்சத்து, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B6 குழந்தையின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதுடன் எடையை அதிகரிக்கவும் உதவுகின்றன. 

பூசணி விதை 

இது குழந்தையின் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் நிறைந்துள்ள பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவுகின்றன. 

weight gain pumpkin seeds

எள்ளு 

இதில் வைட்டமின் E, செலினியம், இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளன. இதனுடன் இதில் உள்ள கலோரிகளும் கார்போஹைட்ரேட்களும் உங்கள் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும். 

ஆளி விதை 

இதில் புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. மேலும் இதில் உள்ள நல்ல கொழுப்பு எடையை அதிகரிக்க உதவும். 

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த பொடி உங்களுக்கு நிச்சயம் பயன் உள்ளதாக இருக்கும்.

 

இந்த பதிவும் உதவலாம்: பாகற்காய் ஜூஸ் குடித்தால், உடலில் இந்த 5 அதிசய மாற்றங்களை காணலாம்! 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]