நம் உடல் ஆரோக்கியமான முறையில் இயங்குவதற்கு தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பித்த நீர் சுரக்க வைக்கிறது, உடலில் ஹீமோகுளோபின் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, பிரத உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்து உடலுக்கு ஆற்றலை வழங்க உதவுகிறது. நம் உடலில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அதை ஆற்றவும் உதவுகிறது. கல்லீரலின் முக்கியமான வேலை நம் உடலில் சேரும் அழுக்குகளை வெளியேற்றுவது மற்றும் உணவு செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரக்க செய்வது தான். நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவும் செரிமானமாக இந்த பித்த நீர் மிகவும் முக்கியம். இது உணவுப்பொருட்கள் மட்டும் இல்லாமல் மாத்திரை, ஆல்கஹால் செரிமானத்திற்கு கூட பெரிதும் உதவுகிறது. அப்படிப்பட்ட கல்லீரலை நாம் பத்திரமாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். குடித்து குடித்து கெட்டுப்போன உங்கள் கல்லீரல் நச்சுக்களை வெளியேற்ற உதவும் ஒரு ஆரோக்கிய பானம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த கல்லீரல் பாதிப்படைய முக்கியமான காரணம் அதிகமாக மதுபானம் குடிப்பது, எண்ணெய் பொருட்கள் சாப்பிடுவது, சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பது போன்றவை கல்லீரலில் கொழுப்புகள் தங்க செய்யும். இன்னும் சிலர் வேகமாக உடல் எடை குறைப்பதாக நினைத்துக் கொண்டு நவீன டயட்டிங் முறையை ட்ரை செய்து உடல் எடையை குறைப்பார்கள், எந்த விதமான உடல் பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைப்பது நம் உடலில் கல்லீரல் பாதிப்பு அடைய முக்கிய காரணமாக இருக்கலாம்.
கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறிகள்:
வயிறு வீக்கம் ஏற்படும், நீங்கள் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகாது, கண்களை சுற்றி கருவளையம் உருவாகும், கண்கள் எப்போதும் சோர்வாகவே இருக்கும், கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும், நீங்கள் என்னதான் தினமும் பல் தேய்த்தால் கூட வாய் துர்நாற்றம் போகவே போகாது. அதே போல வாய் கசப்பும் இருக்கும், திடீரென்று உங்கள் சருமம் வெளுத்துப் போகும், சருமத்தில் அரிப்பு ஏற்படும், சிறுநீரின் நிறம் கூட மாறும். இது எல்லாம் கல்லீரல் பாதிப்பு அடைவதற்கான ஆரம்ப கால அறிகுறிகள். இதை நீங்கள் ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது.
கல்லீரல் நச்சுக்களை வெளியேற்ற ஒரு ஆரோக்கிய பானம்:
தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய் - 4
- கற்றாழை - 1
- தண்ணீர் - அரை டம்ளர்
- கொத்தமல்லி - சிறிதளவு
எப்படி செய்வது?
முதலில் நான்கு நெல்லிக்காய் எடுத்துக்கொண்டு அதன் கொட்டைகளை நீக்கி விட்டு, சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதற்கு பிறகு கற்றாலையிலிருந்து ஜெல்லை மட்டும் தனியாக ஒரு கப்பில் எடுத்து வைக்க வேண்டும். இந்த கற்றாழையில் வைட்டமின்கள் தாதுக்கள் அமினோ அமிலங்கள் எல்லாம் நிறைந்துள்ளது. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்று கூட சொல்லலாம். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை இது கொடுக்கும். அது மட்டுமல்ல கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உதவும். இந்த கற்றாழையில் இருந்து ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு மூன்று ஸ்பூன் அல்லது நான்கு ஸ்பூன் அளவுக்கு இருந்தால் போதும்.
மேலும் படிக்க: தலைமுடி கொட்டாமல் உறுதியாக வளர; இந்த ஜூஸை வாரம் இரண்டு முறை குடித்தால் போதும்
அடுத்ததாக நாம் கொத்தமல்லி எடுத்துக் கொள்ளலாம். இதுவும் நம் செரிமான செயல் முறையை வேகப்படுத்தும். உணவு சீக்கிரம் செரிமானமாக இது உதவும். இந்த கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம் இரும்பு சத்து ரத்தக் குழாய்களில் கொழுப்பு தங்குவதை தடுக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். இதனால் மாரடைப்பு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. இந்த கொத்தமல்லி சாறு நம் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. இது கல்லீரலை பாதுகாக்கும்.
இப்போது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் சிறிதாக நறுக்கிய நெல்லிக்காய் சேர்த்து, அடுத்ததாக மூன்று அல்லது நான்கு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி சேர்க்க வேண்டும். இதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதை வடிகட்டி ஒரு கிளாஸில் ஊற்றி வைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு கூடவே ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் ஒரு கிருமி நாசினி, நம் கல்லீரலை சுத்தமாக வைக்க பெரிதும் உதவும்.
எப்படி குடிக்க வேண்டும்?
தினமும் காலையில் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு அல்லது உணவு சாப்பிட்ட உடனே ஒரு மணி நேரம் பிறகு இதை குடிக்க வேண்டும். குறிப்பாக இதைக் குடித்த பிறகு ஒரு மணி நேரம் வரை எந்த உணவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இந்த பானத்தை குடித்து வந்தால் உங்கள் கல்லீரல் மட்டும் இல்லை உடலில் உள்ள நச்சுக்கள் அழுக்குகள் எல்லாமே வெளியேறும். இதை நீங்கள் மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்தால் போதும். ஆனால் இதை நீங்கள் தினமும் புதிதாக தயாரித்து தான் குடிக்க வேண்டும். அப்போதுதான் இது நல்ல பலன் தரும்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation