தலைமுடி கொட்டாமல் உறுதியாக வளர; இந்த ஜூஸை வாரம் இரண்டு முறை குடித்தால் போதும்

தலையில் பொடுகு, பூஞ்சை தொற்று, உடல் உஷ்ணம் போன்ற காரணங்களும் தலைமுடி உதிர்வை ஏற்படுத்தும். என்னதான் நாம் தலைமுடி வளர வெளிப்புறமாக மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தினால் கூட உடல் உள்ளேயும் சில சத்தான உணவுகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். 
image

பெண்கள் பலருக்கும் வாழ்க்கையில் ஒரு பொதுவான பிரச்சினை இந்த தலைமுறை பிரச்சனை தான். நம் தலை முடிக்கு வரும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் போக்கி நம் தலை முடியை அடர்த்தியாகவும் கருமையாகவும் நீளமாகவும் வளர உதவக்கூடிய ஒரு ஆரோக்கிய பானம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். தலை முடி அதிகமாக கொட்டுவதற்கு ஒரு முக்கிய காரணம் நம் உணவு முறை மற்றும் தூக்கமின்மை. அதேபோல நாம் ஏதாவது நோயினால் பல நாட்களாக அவதிப்பட்டு வந்தாலோ அல்லது தைராய்டு பிரச்சனை இருந்தாலோ இதனால் கூட தலைமுடி கொட்டும். இது இல்லாமல் தலையில் பொடுகு, பூஞ்சை தொற்று, உடல் உஷ்ணம் போன்ற காரணங்களும் தலைமுடி உதிர்வை ஏற்படுத்தும். என்னதான் நாம் தலைமுடி வளர வெளிப்புறமாக மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தினால் கூட உடல் உள்ளேயும் சில சத்தான உணவுகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். இந்த நிலையில் நம் தலைமுடி வளர்ச்சிக்கு உதவு கூடிய அந்த ஆரோக்கிய பானத்தை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.

நெல்லிக்காய் பீட்ரூட் ஜூஸ்:


இரண்டு நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளுங்கள், இதை சிறியதாக நறுக்கி அதன் கொட்டைகளை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம். பொதுவாகவே பொடுகு தொல்லை இருந்தால் முடி கொட்டும் பிரச்சனை அதிகமாகி முடி வளர்ச்சியும் இருக்காது. இந்த பொடுகு பிரச்சனையை குணப்படுத்த நாம் வேப்பிலையை பயன்படுத்துவோம். ஆனால் இந்த நெல்லிக்காய் சாற்றை கூட பொடுகை விரட்ட நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம். ஒருவேளை உங்களுக்கு பொடுகு தொல்லை அதிகமாக இருந்தால் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாற்றையும் கலந்து உச்சந்தலையில் தடவி வந்தால் பொடுகு காணாமல் போய்விடும்.

AmlaJuice_Step4

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து ரத்த சோகை பிரச்சனையை குணப்படுத்தி பொடுகை விரட்டும். இதனால் உங்கள் தலைமுடி வலுவாக மற்றும் அடர்த்தியாக வளரும், இளநரை வராமல் தடுக்கும். அப்படியே இளநரை வந்தால் கூட அதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து உங்கள் தலைமுடியை கருமையாக்க உதவும். இப்போது நாம் நறுக்கி வைத்த நெல்லிக்காயை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

அடுத்தது நமக்கு தேவை ஒரு பீட்ரூட். ஒரு கப் அளவுக்கு பீட்ரூட் இருந்தால் போதும். பீட்ரூட் தோலை நீக்கிவிட்டு அதை சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள். இந்த பீட்ரூட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதிலிருக்கும் தாதுக்களும் ஊட்டச்சத்துக்களும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அது மட்டுமில்லாமல் நம் தலை முடியை வலுவாக்குவதற்கும் உதவும். இது நம் தலை முடி கொட்டுவதை குறைத்து முடி வளர்ச்சிக்கு உதவுவதன் மூலம் வறண்ட கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து உச்சந்தலையில் சீரான ரத்த ஓட்டத்தை பெற உதவும். இதனால் முடி வலுவாகும் மற்றும் தலைமுடி உடைவது குறையும்.

beet-juice-on-rustic-wooden-table-royalty-free-image-1741035878

இப்போது நாம் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் மற்றும் பீட்ரூட்டை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதில் 1.5 டம்பளர் அளவுக்கு தண்ணீரை ஊற்றி அரைத்து எடுக்க வேண்டும். இதை வடிகட்டி கொள்ளுங்கள். இப்போது நாம் வடிகட்டி வைத்த இந்த ஜூஸில் கால் டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடியை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அளவு உப்பையும் இதில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் இந்த பீட்ரூட் நெல்லிக்காய் ஜூஸை வாரத்துக்கு இரண்டு நாட்கள் தொடர்ந்து குடித்து பாருங்கள். உங்கள் தலைமுடி வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும்.

Image source: googl

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP