herzindagi
weight loss poha expert tip

Poha for Weight Loss : 5 கிலோ வரை எடையை குறைக்கலாம், அவலை இப்படி சமைத்து சாப்பிடுங்க!

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அவலை சாப்பிடுவதன் மூலம் 5 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர். மேலும் விவரங்கள் அறிய பதிவை தொடர்ந்து படிக்கவும்…
Editorial
Updated:- 2023-09-11, 17:00 IST

Healthy Breakfast for Weight Loss : உடல் எடையை குறைக்க சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான காலை உணவை தேர்வு செய்து சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம். காலை உணவு சரியாக இருந்தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக ஆற்றலுடன் செயல்படலாம். நல்ல காலை உணவு உடல் எடையை அதிகரிக்காது. மேலும் ஒரு சில உணவுகளை காலை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும்.

அந்த வகையில் எடை இழப்புக்கு உதவக்கூடிய ஒரு அற்புதமான காலை உணவை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம் இது குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான ராதிகா கோயல் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: குறைந்த விலையில் நிறைந்த பலன்கள் தரும் ஊற வைத்த கருப்பு கொண்டைக்கடலை!

அவல் சாப்பிட்டு உடல் எடையை குறைப்பது எப்படி?

poha weight loss

  • உடல் எடையை குறைக்க அவல் சிறந்த தேர்வாக இருக்கும் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார். உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்று எண்ணுவதற்கு பதிலாக, ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவதில் கவனம் செலுத்த முயற்சி செய்யலாம்.
  • உங்களுக்கு எடையை குறைக்க சிரமமாக இருந்தால், இதற்கு மோசமான வளர்சிதை மாற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். எடையை குறைக்க சிரமப்படுபவர்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • அவலில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் C, A, கார்போஹைட்ரேட்கள் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் குறைந்த அளவு கலோரிகளே இருப்பதால் எடை இழப்புக்கான சிறந்த தீர்வாக இருக்கும்.
  • அவலில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும். மேலும் காலை உணவாக அவலை எடுத்துக் கொள்ளும் பொழுது நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது.
  • அவல் எளிதில் ஜீரணமாகும். இக்காரனத்தினால் பலவீனமான செரிமானம் உள்ளவர்களும் அவலை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • அவலை காலை உணவாக மட்டும் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இதை இரவு உணவாகவோ அல்லது மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவோ எடுத்துக் கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்க அவலை எப்படி சாப்பிட வேண்டும்?

does poha help in weight loss

  • அவலை சமைப்பதற்கு குறைந்த அளவு எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • சமைப்பதற்கு ஆலிவ் எண்ணெய் அல்லது சிறிதளவு நெய் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • நீங்கள் சமைக்கும் அவல் ரெசிபிகளில் அவலுக்கு நிகரான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • அவலுடன் புரதம் நிறைந்த பன்னீர் துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இதில் ஆரோக்கியமான கொழுப்பை சேர்க்க விரும்புபவர்கள் வேர்க்கடலை, முந்திரி போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • முடிந்தவரை அவலை வேக வைத்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். இது ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.
  • அவல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது எடை இழப்புக்கு நிச்சயம் உதவும். ஆனால் இதை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நிச்சயமாக மறந்துவிடக்கூடாது.

இந்த பதிவும் உதவலாம்: புற்றுநோய்க்கு குட்பை! இந்த 3 பொருட்களை இன்றே தூக்கி எறியுங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]