புற்றுநோய் மிகவும் ஆபத்தானது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மரபணு, புகையிலை, சூரிய ஒளியிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள், உடல் பருமன், கதிர்வீச்சு, காற்று மாசுபாடு, HPV, HIV, மது போன்ற பல காரணங்களால் புற்றுநோய் ஏற்படலாம்.
ஒரு சில பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் புற்றுநோயின் அபாயத்தை குறைக்க முடியும். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களை விட்டு விலகி இருப்பதுடன் புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்களையும் முற்றிலும் நீக்க வேண்டும். சமையலறையில் நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களும் இதில் அடங்கும். புற்று நோயின் அபாயத்தை அதிகரிக்கும் 3 தீங்கு விளைவிக்கும் பொருட்களை பற்றி ஊட்டச்சத்து நிபுணரான சிம்ரன் கௌர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: தொப்பையை குறைக்க இந்த 5 குறிப்புகளை பின்பற்றினால் போதும்!
உணவை பேக் செய்வதற்கு அலுமினிய ஃபாயில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை கெடுப்பதோடு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது. சில சமயங்களில் இது புற்று நோயையும் உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
சூடான உணவை அலுமினிய ஃபாயிலில் பேக் செய்யும் பொழுது உணவில் அலுமினியத்தின் அளவு அதிகரிக்கிறது. இவை உணவுடன் கலந்து எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். அலுமினிய ஃபாயிலில் புளிப்பு அல்லது அதிக காரம் உள்ள உணவுகளை பேக் செய்ய வேண்டாம். இதில் உணவுகளை பேக் அல்லது சேமித்து வைக்கும் பொழுது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உணவில் கலந்து நேரடியாக உடலுக்குள் செல்கின்றன. இது புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தலாம்.
டீ இன்றி நாள் நிறைவடையாது. நம்மில் பலரும் காலை அல்லது மாலை நேரத்தில் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஒரு சிலர் டீ போடுவதற்கு டீ பேக்குகளை பயன்படுத்துகிறார்கள். டீ பேக்குகளை பயன்படுத்துபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இப்போதே இதை தவிர்த்திடுங்கள். இது போன்ற டீ பேக்குகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
இந்த பேக்குகளை சூடான நீரில் போடும்பொழுது, அவை நிறைய மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்குகளை வெளியிடுகின்றன. இவற்றை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அல்லது இவற்றை தண்ணீரில் போடும்போது வெளியிடப்படும் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தலாம். புற்றுநோய் வராமல் தடுக்க இந்த டீ பேக்குகளை தவிர்ப்பது நல்லது.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பல ஆபத்துகளை விளைவிக்கின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது பாத்திரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். மல்லிகை பொருட்களை சேமித்து வைப்பது முதல் தண்ணீர் குடிக்கும் பாட்டில்கள் வரை பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் பல பொருட்களும் பிளாஸ்டிக்கால் ஆனவை. இதில் உள்ள ரசாயனங்கள் வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் மற்றும் கருவுறுதல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
நிபுணரின் கருத்துப்படி சூடான உணவுகளை பிளாஸ்டிக் பாக்ஸில் போடும்பொழுது, இதிலிருந்து வெளியாகும் ரசாயனங்கள் உணவுடன் கலக்கின்றன. மேலும் பிளாஸ்டிக் பாத்திரங்களை தயாரிக்க Bisphenol A(BPA) என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது நாம் உண்ணும் உணவின் வாயிலாக உடலுக்குள் சென்று புற்றுநோய் செல்களை அதிகரிக்கிறது.
இன்றைய பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள 3 பொருட்கள் உங்கள் சமையலறையில் இருந்தால் அதை இன்றே அப்புறப்படுத்துங்கள். புற்றுநோய் வராமல் தடுக்க நம்மால் முடிந்த முயற்சிகளை செய்வோம்!
இந்த பதிவும் உதவலாம்: தினசரி 5 ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிடுவது உடலுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]