Belly Fat Loss Tips : தொப்பையை குறைக்க இந்த 5 குறிப்புகளை பின்பற்றினால் போதும்!

தொப்பை வர பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் குறைக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால் இந்த 5 குறிப்புகுகளையும் தவறாமல் பின்பற்றுங்கள்….

tips to lose belly fat  easily

Tips to Reduce Belly Fat : எடையை கூட குறைத்திடலாம், ஆனால் இந்த தொப்பையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. பிரசவத்திற்கு பிறகு உங்கள் குழந்தை கொடுத்த இந்த அழகிய பரிசை குறைக்க கூட நேரம் இல்லாமல் ஓடி கொண்டு இருக்கிறீர்களா? வளர்ந்த பின் " உங்களுக்கு மட்டும் ஏன் மா வயிறு பெருசா இருக்குனு " அந்த குழந்தையே கேட்கும் பொழுது நம்மிடம் சொல்ல பதில் ஏதும் இருக்காது.

குழந்தைகள், குடும்பம் என சுயநலமில்லாமல் வாழ்வது தவறல்ல. அதே சமயம் உங்கள் நலனில் அக்கறை கொண்டு உங்களுக்காக நேரம் ஒத்துக்குவதும், உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதும் தவறல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். தொப்பை மற்றும் எடையை குறைப்பது அழகு சார்ந்த விஷயம் மட்டும் கிடையாது. சீரான உடல் எடை நல்ல ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கிறது. விடப்படியான தொப்பை கொழுப்பை குறைக்க சரியான உணவு, தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். இதற்கு உதவக்கூடிய 5 முக்கிய குறிப்புகளை இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நிறைய பழம் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்

பழம் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஆய்வுகளின் படி நார்ச்சத்து இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்கவும் டைப் 2 சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்கவும் உதவுவதாக தெரியவந்துள்ளது. தினசரி உணவில் காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்

tips to lose belly fat cycling

நீச்சல், ஸ்கிப்பிங், சைக்கிளிங் இது போன்ற கார்டியோ பயிற்சிகளை தினமும் 30 நிமிடங்களாவது செய்ய முயற்சி செய்யலாம். இது போன்ற பயிற்சிகள் கலோரிகளை எரிக்கவும் தொப்பையை குறைக்கவும் உதவுகின்றன. காலை அல்லது மாலையில், உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது உடற்பயிற்சி செய்யலாம். ஆனால் தினமும் உடற்பயிற்சி செய்ய மறக்காதீர்கள்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் நுட்பங்களை கற்றுக்கொள்ளுங்கள்

நீண்டகால மன அழுத்தத்தால் அதிகரிக்கும் கார்டிசோல் ஹார்மோன்களால் வயிற்றை சுற்றியுள்ள பகுதிகளில் கொழுப்புகள் சேர தொடங்குகின்றன. உடலில் கார்டிசோல் ஹார்மோன்கள் அதிகரிக்கும் பொழுது அதிகப்படியான பசி, தூக்கமின்மை மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் மன அழுத்தத்தை குறைக்க சுவாச பயிற்சிகள், யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்யலாம் இந்த பயிற்சிகளின் மூலம் கார்டிசோலின் அளவுகளை சீராக வைத்துக் கொள்ளலாம்.

நல்ல தரமான தூக்கத்தை சமரசம் செய்யாதீர்கள்

உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கமின்மையால் அதிகப்படியான பசி உணர்வு மற்றும் உடல் பருமன் ஏற்படலாம். குறைவான தூக்கம் மட்டும் அல்ல அதிகப்படியான தூக்கமும் எடையை அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 6-8 மணி நேரங்கள் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்

tips to lose belly fat protein foods

தொப்பையை குறைக்க புரதம் நிறைந்த உணவுகளை உங்கள் தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள். புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த சமச்சீரான உணவுகள் சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் நிறைவாக இருக்கும். இதனுடன் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், தசைகள் பலவீனமடைவதை தடுக்கவும் புரதச்சத்து உதவுகிறது. புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு தொப்பை குறைவாக இருப்பதாக ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: 7 நாட்களில் உடல் எடையை குறைப்பது எப்படி?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP