herzindagi
diet plan to lose weight in seven days

Weight Loss Diet Plan : 7 நாட்களில் உடல் எடையை குறைப்பது எப்படி?

உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நல்லா சாப்பிட்டாலும், நல்லதா சாப்பிட்டா எடை கூடவே கூடாது! உங்களுக்கான 7 நாள் டயட் பிளான்…
Editorial
Updated:- 2023-09-08, 05:00 IST

உடல் எடையை குறைக்க டயட் : காதல் தோல்வியை விட கொடியது, நல்லா சாப்பிட்டு பழகிவர்களை சாப்பிடாமல் இருக்க சொல்வது. நீங்க நல்லா சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருக்க வேண்டுமா? உங்களுக்கான ஒரு சில சீக்ரெட் டிப்ஸை இன்றைய பதிவில் பகிர்ந்துள்ளோம். உதாரணமாக உங்களுக்கு பீட்சா சாப்பிட பிடிக்கும் என்றால், பீட்சா சாப்பிடுவதற்கு முன்னதாக ஒரு கப் சாலட் சாப்பிடலாம். சாலட் உங்களை நிறைவாக வைத்திருக்கும், இதற்கு பிறகு 1-2 ஸ்லைஸ் பீட்சாவிற்கு மேல் உங்களால் சாப்பிட முடியாது. மேலும் நீங்கள் கோதுமை அல்லது சிறுதானியங்களை பயன்படுத்தி பீட்சா பேஸ் செய்யலாம் மற்றும் எடை இழப்புக்கு உதவக்கூடிய காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்.

நம் அன்றாட உணவில் ஒரு சில மாற்றங்களை செய்தால் போதும், எடை இழப்பு எளிதாகும். கடுமையான டயட் உங்களை ஒரு சில நாட்களில் சோர்வடைய செய்துவிடும். எனவே உணவில் அதிக கட்டுப்பாடு விதிக்காமல், சரியான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுங்கள். சுவையில் சமரசம் செய்யாமல், நல்ல சுவையான ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை குறைப்பதற்கான 7 நாள் டயட் பிளானை இன்றைய பதிவில் பார்க்க போகிறோம்.

இந்த பதிவும் உதவலாம்:  தினமும் காலையில் வெந்நீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்!

Diet Plan for Weight Loss : 7 நாட்களுக்கான உணவுத்திட்டம் 

weight loss diet plan

நாள் 1 டயட் 

  • காலையில் எழுந்தவுடன் - 1 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் ஆளி விதை பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
  • காலை உணவு - 1 கப் சமைக்கப்பட்ட அவல், 1 கிளாஸ் சுரைக்காய் ஜூஸ், மற்றும் 3 டேபிள் ஸ்பூன் முளைகட்டிய பயறு சாப்பிடலாம்.
  • காலை ஸ்நாக்ஸ் - புதினா மற்றும் ஜீரகம் சேர்த்து தயார் செய்த மோர் குடிக்கலாம்.
  • மதிய உணவு -  1 கப் பிரவுன் ரைஸ், 1 கப் காய்கறி மற்றும் 1 கப் பருப்பு சாப்பிடலாம்.
  • மாலை ஸ்நாக்ஸ் - 1 கப் கிரீன் டீ மற்றும் 1/2 கப் வறுத்த தாமரை விதைகளை எடுத்துக்கொள்ளலாம்.
  • இரவு உணவு - 2 சப்பாத்தி, 1 கப் காய்கறி கிரேவி, 1 கப் பூசணி மற்றும் பருப்பு சூப்.

நாள் 2 டயட்

  • காலையில் எழுந்தவுடன் - காலையில் எழுந்தவுடன் ஊறவைத்த 3 அக்ரூட் பருப்புகளை சாப்பிடலாம். இதனுடன் 1 டீஸ்பூன் துளசி சாறையும் எடுத்துக்கொள்ளலாம்.
  • காலை உணவு - காலை உணவிற்கு பிரவுன் அரிசியை கொண்டு தயாரிக்கப்பட்ட 3 இட்லியுடன், காய்கறிகளை சேர்த்த சாம்பாரை எடுத்துக் கொள்ளலாம். 
  • காலை ஸ்நாக்ஸ் - 1 கப் பழங்களை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.
  • மதிய உணவு -  1 கப் காய்கறி சாலட், வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் 2 சப்பாத்திக்களை மதிய உணவிற்கு சாப்பிடலாம்.
  • மாலை ஸ்நாக்ஸ் - ஒரு கப் சர்க்கரை சேர்க்காத டீயுடன் உங்களுக்கு விருப்பமான சுண்டலை ¼ கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம்.
  • இரவு உணவு - இரவு உணவிற்கு 1 கப் பூசணி சூப்வுடன், 1 கப் மசாலா ஓட்ஸ் மற்றும் வதக்கிய காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.

one week diet paln

நாள்  3 டயட்

  • காலையில் எழுந்தவுடன் - 1 கப் இஞ்சி-துளசி டீ மற்றும் 1 டீஸ்பூன் சீட்ஸ் கலவைகளை சாப்பிடலாம்.
  • காலை உணவு - 4 டேபிள் ஸ்பூன் முளைகட்டிய பச்சை பயிறு சாப்பிடலாம். இதனுடன் 1 கப் ஓட்ஸ் மற்றும் பால் கலவையை எடுத்துக் கொள்ளலாம்.
  • காலை ஸ்நாக்ஸ் - ஏதேனும் 1 கப் காய்கறி ஜூஸ் குடிக்கலாம்
  • மதிய உணவு - கோதுமை மாவுக்கு பதிலாக முழு தானியங்களை கொண்டு சப்பாத்தி செய்ய பயன்படுத்தலாம். இதில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்து ஸ்டஃப்டு சப்பாத்தி ஆகவும் சாப்பிடலாம். இதனுடன் 1 சிறிய கப் வெள்ளரிக்காய் தயிர் பச்சடியையும் சேர்த்துக் கொள்ளவும்.
  • மாலை ஸ்நாக்ஸ் - 1 கிளாஸ் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு கைப்பிடி அளவு வேக வைத்த வேர்க்கடலை சாப்பிடலாம்.
  • இரவு உணவு - இரவு உணவிற்கு பூசணிக்காய் சூப், 1 சப்பாத்தி மற்றும் ஒரு கப் காய்கறி கிரேவியை எடுத்துக் கொள்ளலாம் 

நாள் 4 டயட்

  • காலையில் எழுந்தவுடன் - உங்களுடைய நாளை 1 கப் எலுமிச்சை இஞ்சி டீ மற்றும் 5 ஊற வைத்த பாதாமுடன் தொடங்கலாம்.
  • காலை உணவு - இரண்டு ஸ்லைஸ் பிரவுன் பிரட் சாண்ட்விச் மற்றும் 1 கிளாஸ் வெள்ளரிக்காய் கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.
  • காலை ஸ்நாக்ஸ் - ஒரு கிளாஸ் இளநீரை குடிக்கலாம்.
  • மதிய உணவு -  மதிய உணவிற்கு 1 கப் சாதம், 1 கப் பருப்பு மற்றும் 1 கப் ரசம் எடுத்துக் கொள்ளலாம்.
  • மாலை ஸ்நாக்ஸ் - 1 கப் மூலிகை டீ யுடன், வேகவைத்த ஸ்வீட் கார்ன் சாப்பிடலாம்.
  • இரவு உணவு - ஒரு கப் மஸ்ரூம் சூப்புடன் வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கை எடுத்துக் கொள்ளலாம்.

நாள் 5 டயட்

  • காலையில் எழுந்தவுடன் -2 டேபிள் ஸ்பூன் நட்ஸ் கலவையுடன், ஆப்பிள் சிடர் வினிகர் கலந்த நீரை எடுத்துக் கொள்ளலாம்.
  • காலை உணவு - ஒரு கப் வேகவைத்து கொண்டை கடலையுடன் ஒரு சப்பாத்தியை எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் புதினா, வெள்ளரிக்காய் மற்றும் கீரையை சேர்த்து அரைத்த ஜூஸையும் ஒரு கிளாஸ் அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம்.
  • காலை ஸ்நாக்ஸ் - ஒரு கப் தர்பூசணியை ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்.
  • மதிய உணவு - இரண்டு சப்பாத்தியுடன் 1 கப் சுரைக்காய் கூட்டு மற்றும் 1 கிளாஸ் மோர் எடுத்துக் கொள்ளலாம்.
  • மாலை ஸ்நாக்ஸ் - 1/4 கப் வேகவைத்த வேர்க்கடலை மற்றும் ஒரு கப் கிரீன் டீ யை எடுத்துக்கொள்ளவும்.
  • இரவு உணவு - ஒரு கப் காய்கறிகள் சேர்த்த கிச்சடி மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் சட்னியை இரவு உணவிற்கு எடுத்துக் கொள்ளலாம்.

weight loss diet tips

நாள் 6 டயட்

  • காலையில் எழுந்தவுடன் - இஞ்சி டீயுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
  • காலை உணவு - காலை உணவிற்கு கடலை மாவு தோசை அல்லது பருப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட அடை தோசையை 2 டேபிள் ஸ்பூன் சட்னியுடன் எடுத்துக் கொள்ளலாம்.
  • காலை ஸ்நாக்ஸ் - 1 கப் ஃப்ரூட் சாலட் சாப்பிடலாம்.
  • மதிய உணவு -  மதிய உணவிற்கு 2 சிறுதானிய ரொட்டி, 1 கப் காய்கறி மற்றும் 1 கப் தக்காளி சூப் எடுத்துக் கொள்ளலாம் 
  • மாலை ஸ்நாக்ஸ் - ஒரு கப் கிரீன் டீயுடன் 3 டேபிள் ஸ்பூன் மிக்சர் சாப்பிடலாம்.
  • இரவு உணவு - இரவு உணவிற்கு பன்னீரை கொண்டு தயாரிக்கப்பட்ட 1 சப்பாத்தி ரோல் மற்றும் 1 கப் காய்கறி சாலடை எடுத்துக் கொள்ளலாம்.

நாள் 7 டயட்

  • காலையில் எழுந்தவுடன் - ஒரு கப் எலுமிச்சை தேன் கலந்த டீ மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் பூசணி விதைகளை எடுத்துக் கொள்ளவும்.
  • காலை உணவு - 2 பிரவுன் ரைஸ் தோசையுடன்  சாம்பார் சேர்த்து காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
  • காலை ஸ்நாக்ஸ் - ஒரு கிளாஸ் மோர் குடிக்கலாம்.
  • மதிய உணவு -  ஒரு கப் பாசிப்பருப்பு கிச்சடியுடன் ஒரு கப் வெள்ளரிக்காய் தயிர் பச்சடியை சேர்த்து மதிய உணவிற்கு எடுத்துக் கொள்ளலாம்
  • மாலை ஸ்நாக்ஸ் - மாலையில் இஞ்சி டீயுடன் பச்சை பட்டாணி சாட் செய்த சாப்பிடலாம். 
  • இரவு உணவு - இரண்டு சப்பாத்தியுடன் 1 கப் பச்சைப்பட்டாணி கிரேவி மற்றும் 1 கப் தக்காளி சூப் எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பு : இந்த டயட் பிளான் பொதுவானது உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை அல்லது அலர்ஜி இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த உணவு திட்டத்தையும் பின்பற்ற வேண்டாம். உங்களுடைய உடல் எடை மற்றும் உடல் நல பிரச்சனைகளுக்கு ஏற்ப உங்களுக்கான பிரத்தியேக டயட் பிளானை நிபுணரின் ஆலோசனையுடன் பின்பற்றலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஒரே மாதத்தில் 3 கிலோ எடையை குறைக்க தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]