herzindagi
black chana benefits for women

Soaked Black Chana : குறைந்த விலையில் நிறைந்த பலன்கள் தரும் ஊற வைத்த கருப்பு கொண்டைக்கடலை!

சத்துக்களுக்கு பஞ்சமில்லை, கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்…
Editorial
Updated:- 2023-09-11, 05:00 IST

கருப்பு கொண்டக்கடலையை வேக வைத்து சுண்டலாக சாப்பிட்டாலும் சரி அல்லது குழம்பு வைத்து சாப்பிட்டாலும் சரி, அதன் சுவை கலக்கலாக இருக்கும். கருப்புக் கொண்ட கடலையில் சுவை மட்டுமல்ல, இரும்புச் சத்து உட்பட உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இதை சமைத்து சாப்பிடுவதை தவிர ஊற வைத்தும் சாப்பிடலாம். இதற்கு கருப்புக் கொண்ட கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளலாம். 

ஊறவைத்த கருப்பு கொண்டக்கடலையை சரியான அளவுகளில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதை அதிகமாக சாப்பிடும் பொழுது வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. ஊற வைத்த கருப்பு கொண்டைக்கடலையின் பயன்களை ஊட்டச்சத்து நிபுணரான சிம்ரன் சைனி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம்: பெண்களை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் 5 விதைகள்!

புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது 

சைவ உணவு சாப்பிடுபவர்களின் புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்ய தினமும் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையை எடுத்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள இரும்பு சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது.

உடல் பலவீனம் நீங்கும் 

காலையில் எழுந்தவுடன் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிட்டால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படலாம். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பலவீனம் நீங்கி நல்ல உடல் வலிமயை பெறலாம்.

செரிமானத்தை மேம்படுத்தும் 

soaked kala chana benefits

ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளையும் தடுக்கலாம்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது 

ஊறவைத்த கொண்டைக்கடலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் உள்ளன. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இரத்த கட்டிகள் உருவாவதை தடுக்கவும் மிகவும் அத்தியாவசியமானவை.

உடல் எடையை குறைக்க உதவும் 

ஊறவைத்த கருப்பு கொண்டக்கடலையில் நிறைந்துள்ள நார்ச்சத்து உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருப்பதன் மூலம் அதிகப்படியான உணவு உட்கொள்ளலை தடுக்கிறது. அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையை பராமரிக்க முடியும்.

கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்கும்

ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து பித்த அமிலங்களை பிணைக்கவும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றன. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

soaked black chickpea benefits

தலை முடிக்கு சிறந்தது

தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின்களும், தாதுக்களும் கருப்பு கொண்டைக்கடலையில்  அதிக அளவில் உள்ளன. மேலும் இதில் உள்ள புரதம் தலைமுடியின் வேர்க்கால்களை வலுவாக வைத்திருப்பதன் மூலம் முடி உதிர்வை தடுக்கிறது. இதை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் நரை முடியையும் தடுக்கலாம்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் 

தினமும் காலையில் ஊறவைத்த கருப்பு கொண்டக்கடலையை சாப்பிட்டு வர உடலின் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், டைப் 2 சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன.

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது

கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கின்றன. 

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் என் தாய்மார்களுக்கு நல்லது 

கருப்புக் கொண்டைக்கடலையில் உள்ள இரும்புச்சத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிக நன்மைகளை தரும். இதை சாப்பிட்டு வர பெண்களின் முகம் பளபளப்பாகும். சரும பிரச்சனைகளை தடுக்கவும், இயற்கையான முறையில் சரும பொலிவை அதிகரிக்கவும் தினமும் காலையில் ஊறவைத்த கருப்பு கொண்டக்கடலையை எடுத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு ஊறவைத்த கருப்பு கொண்டை கடலையை சாப்பிட விருப்பம் இல்லை என்றால் அதை வேக வைத்தும் எடுத்துக் கொள்ளலாம். ஏதேனும் உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசனை செய்த பின் இதை பின்பற்றுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்:  புற்றுநோய்க்கு குட்பை! இந்த 3 பொருட்களை இன்றே தூக்கி எறியுங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]