பழங்களும் காய்கறிகளும் மட்டும்தான் ஆரோக்கியமான உணவு என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் விதைகள் இவை எல்லாவற்றையும் விட சிறந்த நன்மைகளை கொண்டுள்ளன. என்னது, விதை எப்படி ஆரோக்கியமானதாக இருக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா? இந்த பதிவை முழுமையாக படித்த பின் உங்களுடைய சந்தேகம் முழுவதும் தீர்ந்துவிடும்.
விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் பெண்களுக்கு நன்மை தரக்கூடிய மிகச்சிறந்த விதைகளை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். இது உங்களை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவும். இந்த விதைகள் பற்றிய தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான சிம்ரன் சைனி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: தினசரி 5 ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிடுவது உடலுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?
இந்த சிறிய விதைகளில் நாம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு பல அற்புத நன்மைகள் நிறைந்துள்ளன. பெண்களுக்கு நன்மை தரக்கூடிய விதைகளை இப்போது விரிவாக காணலாம்.
ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ, சியா விதைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும்படி ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை செய்கிறார். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதம், கால்சியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை குறைக்கவும், மூளையின் செயல் திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் சியா விதைகளில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், இரத்த சர்க்கரையின் அளவுகளை சீராக வைத்துக் கொள்ளவும் உதவும். சியா விதைகளை தினசரி உணவில் சேர்த்து வர ஆரோக்கியமான எலும்புகளையும் பற்களையும் பெறலாம். இதற்கு 1/2 டீஸ்பூன் அளவிலான சியா விதைகளை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின்பு சாப்பிடலாம்.
எள்ளு விதைகளில் காணப்படும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவுகளை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதைத் தவிர எள்ளு விதைகளில் புரதம், கால்சியம், B காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. எள்ளு விதைகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. மேலும் எள்ளு விதைகளில் காணப்படும் புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் பெண்களின் எலும்புகளுக்கு வலு சேர்ப்பதாக நிபுணர் குறிப்பிட்டுள்ளார். எள்ளு உருண்டை, சாதம் அல்லது ஏதேனும் உணவிலும் எள்ளு சேர்த்தும் சாப்பிடலாம்.
பூசணிக்காயை சமையலுக்கு பயன்படுத்திய பிறகு அதன் விதைகளை தூக்கி எறிந்து விடுகிறோம். இந்த விதையில் பல அதிசய நன்மைகள் உள்ளன. இந்த விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளை தெரிந்தால் இனி நிச்சயமாக பூசணி விதைகளை தூக்கி எறிய மாட்டீர்கள். இது பெண்களுக்கு மிகவும் நல்லது. பெண்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோயை தடுக்கலாம். இதில் நிறைந்துள்ள இரும்புச்சத்து உங்களை ஆற்றலுடன் செயல்பட அனுமதிக்கும். பூசணி விதைகளில் காணப்படும் மெக்னீசியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் K மற்றும் நார்ச்சத்துக்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.
ஆரோக்கியமாக வாழ இந்த சூப்பர் உணவை உங்கள் தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள் இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் B, கால்சியம், மெக்னீசியம், தாமிரம், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. ஆளி விதைகளை சாப்பிட்டு வர மலச்சிக்கல், அசிடிட்டி, சர்க்கரை நோய், மூட்டு வலி, புற்று நோய், இருதய நோய் போன்ற பல நோய்களின் அபாயத்தை குறைக்கலாம். பொடித்த ஆளி விதைகளை தண்ணீர் அல்லது உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இது மாதவிடாய் வலி மற்றும் மூட்டு வலிக்கு நல்ல நிவாரணம் தரும். இதைத் தவிர, தாய்மார்கள் தங்களுடைய தாய்ப்பால் உற்பத்தியை மேம்படுத்த ஊற வைத்த வெந்தய விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தொப்பையை குறைக்க இந்த 5 குறிப்புகளை பின்பற்றினால் போதும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]