நம் வயிற்றில் புழுக்கள் வருவதற்கு முக்கிய காரணம் சுத்தம் இல்லாத உணவுகளை சாப்பிடுவது மற்றும் சுத்தம் இல்லாத தண்ணீரை குடிப்பது. வயிற்றில் புழுக்கள் வந்துவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? அது நம் ரத்தத்தை உறிந்து நமக்கு ரத்த சோகையை உண்டாக்கும். இதனால் உங்கள் உடல் எடை மிகவும் வேகமாக குறையும். அடிக்கடி வயிற்று வலி ஏற்படும், உடல் முழுவதும் பலவீனமாக உணருவீர்கள், என்ன சாப்பிட்டாலும் அடிக்கடி வாந்தி குமட்டல் ஏற்படும். இந்த குடல் புழுக்களை சில எளிமையான வீட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்தலாம். அந்த வரிசையில் குடல் புழுக்களை வெறும் மூன்றே நாட்களில் விரட்டி அடிக்க உங்களுக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பூசணி விதைகள்:
ஒரு அகண்ட பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் கால் கப் அளவுக்கு பூசணி விதைகளை சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வாசனை வரும் வரை இந்த பூசணி விதைகளை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதற்குப் பிறகு இந்த பூசணி விதைகள் சூடு ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு பத்திரமாக எடுத்து வைக்க வேண்டும். நீங்கள் தினமும் இரவு உணவு சாப்பிட்ட பிறகு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு கிளாஸ் பசும்பாலை எடுத்து அதில் இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து குடிக்க வேண்டும். சுவைக்காக தேவைப்பட்டால் சிறிதளவு வெல்லத்தையும் இதில் சேர்த்து குடிக்கலாம். இதை தொடர்ந்து ஒரு மூன்று நாட்கள் செய்து வந்தால் வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் எல்லாம் மலம் வழியாக வெளியேறிவிடும். ஒருவேளை உங்கள் குழந்தைகளுக்கு இந்த பூசணி விதை பொடியை கொடுக்க வேண்டும் என்றால் இதை அரை டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட கொடுக்கலாம்.
அன்னாசிப்பழம்:
வயிற்றில் உள்ள குடல் புழுக்களை வெளியேற்ற உதவும் ஒரு சிறந்த வழி அன்னாசிப்பழம். முதலில் ஒரு அன்னாசி பழத்தை எடுத்து தோல் சீவி சிறிய அளவில் நறுக்கிக் கொள்ளுங்கள். இது குடல் புழுக்களை வெளியேற்ற மட்டுமல்லாமல் நம் சிறுநீரகங்களில் ஏதாவது அழுக்கு இருந்தால் அதையும் வெளியேற்றும் மற்றும் உடலில் நச்சுக்களை வெளியேற்ற உதவும். ஆனால் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிடக் கூடாது. ஏனென்றால் இதனால் உடல் சூடு அதிகரிக்கும். குறிப்பாக கர்ப்பமாக உள்ள பெண்கள் ஆரம்ப காலத்தில் இந்த அன்னாசி பழத்தை தவிர்க்க வேண்டும். இப்போது நாம் நறுக்கி வைத்த அன்னாசி பழத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கேரட் எடுத்து அதை சின்ன சின்னதாக நறுக்கி அதே மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.
கேரட்டில் உள்ள நார்ச்சத்து குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். நீங்கள் தினமும் காலையில் ஒரு பச்சை கேரட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு எந்த தொற்றும் வராது. இப்போது மிக்ஸி ஜாரில் அன்னாசி பழம் கேரட் சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் கால் டேபிள் ஸ்பூன் அளவுக்கு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூன்று நாட்களில் குடல் புழுக்கள் வெளியேறும். முக்கியமாக இந்த ஜூஸை தயாரித்த உடனே குடித்து விட வேண்டும். அப்போதுதான் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
மேலும் படிக்க: மூட்டு வலி வீக்கம் நிரந்தரமா குணமாக; இந்த ஒரு மூலிகையை இப்படி பயன்படுத்தி பாருங்க
பப்பாளி விதை:
குடல் புழுக்களை குணமாக்க உதவும் மற்றொரு சிறந்த வழி பப்பாளி விதைகள். இந்த பப்பாளி பழத்தை பாதியாக நறுக்கி அதில் உள்ள விதைகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நம் வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் சக்தி இந்த பப்பாளி விதைகளுக்கு உள்ளது. அது மட்டும் இல்லாமல் சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய் தொற்றுக்களையும் இது குணப்படுத்த உதவும். இந்த பப்பாளி விதைகளை ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தேன் சேர்த்து அப்படியே சாப்பிடலாம்.
இதைத் தொடர்ந்து ஒரு மூன்று நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இல்லை என்றால் இந்த பப்பாளி விதைகளை வெயிலில் நன்றாக காய வைத்து பொடி செய்து நம் வீட்டில் சமைக்கும் ரசம் காய்கறி சூப் போன்றவற்றில் கூட இதை கலந்து சாப்பிடலாம். குறிப்பாக இந்த பப்பாளி விதைகளை அளவாக சாப்பிட வேண்டும். இதை அதிகமாக சாப்பிட்டால் ஒரு சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். இந்த இயற்கை வைத்தியங்களை தொடர்ந்து மூன்று நாட்கள் பயன்படுத்தி வந்தால் உங்கள் வயிற்றில் இருக்கும் குடல் புழுக்கள் உடனே நீங்கிடும்.
Image source: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation