herzindagi
image

மூட்டு வலி வீக்கம் நிரந்தரமா குணமாக; இந்த ஒரு மூலிகையை இப்படி பயன்படுத்தி பாருங்க

மூட்டு வலி ஒரு கொடிய பிரச்சனையாக மாறாமல் இருக்க, ஆரம்பத்திலேயே கவனம் எடுத்துக்கொள்வது அவசியம். மூட்டுவலி வீக்கம் குணமாக உதவும் மூலிகை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2025-07-16, 17:42 IST

மூட்டு வலி என்பது சாதாரணமாகத் தானாகவே குணமாகிவிடும் ஒரு பிரச்சினை அல்ல. ஒரு சில பெண்களுக்கு இது நீரிழிவு நோயைப் போலவே வாழ்நாள் முழுவதும் தொல்லை தரக்கூடியது. "எந்த நோய் வந்தாலும் வரலாம், ஆனால் மூட்டு வலி மட்டும் வரக்கூடாது" என்று சொல்லும் அளவுக்கு இது கொடிய வலியை ஏற்படுத்தக்கூடியது. மூட்டு வலி திடீரெனத் தீவிரமடைவதில்லை. படிப்படியாக அதிகரித்து, நாளடைவில் கடுமையாகிறது. எனவே, ஆரம்ப அறிகுறிகள் தென்படும்போதே சரியான முறையில் கவனித்தால், இந்த மூட்டு வலியை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். அந்த வரிசையில் மூட்டுவலி வீக்கம் குணமாக உதவும் மூலிகை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

மூட்டுகள் என்பது மிகவும் முக்கியமான உடல் உறுப்புகள். இவற்றை சரியாகப் பராமரிக்க வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுத்து, மூட்டுகளில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து, பிறகு குளிப்பார்கள். மூட்டுகளில் எண்ணெய் தடவினால், அது தோலுக்குள் ஊடுருவி, மூட்டுகளை மிருதுவாகவும், நெகிழ்வாகவும் வைத்திருக்கும். இதனால் எலும்புகள் கடினமாகாமல் பாதுகாக்கப்படும். மூட்டுகளுக்கு தினசரி இயக்கம் தேவை. இயக்கம் இருந்தால் மட்டுமே அந்தப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மூட்டுகள் பலமடைகின்றது. அதிக உழைப்பால் ஏற்படும் மூட்டு வலி அல்லது வீக்கம் தற்காலிகமானது தான். ஆனால் மூட்டு வலியின் ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம்.  

knee joint pain

மூட்டு வலியின் அறிகுறிகள்:

 

  • காலையில் எழுந்ததும் மூட்டுகள் விறைப்பாக இருப்பது
  • மூட்டுகளில் வலி, வீக்கம் அல்லது சிவப்பு நிறம்
  • எடை குறைதல்
  • தொடர்ந்து காய்ச்சல், சோர்வு அல்லது அதிகக் களைப்பு
  • மூட்டு வலி உள்ள இடத்தில் ஆறு வாரங்களுக்கும் மேலாக வீக்கம் குறையாமல் இருந்தால், அது கடுமையான மூட்டு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

மேலும் படிக்க: அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையா? இனி இந்த எண்ணெயில் சமைத்து சாப்பிடுங்க

மூட்டுவலியை குணப்படுத்த முடக்கத்தான் கஷாயம்:


முடக்கத்தான் இலைகள் மூட்டுவலியை குணப்படுத்த உதவும் ஒரு சிறந்த மூலிகை. நம் உடலில் உள்ள யூரிக் அமிலத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றும் சக்தி இந்த முடக்கத்தான் கீரைக்கு உண்டு. நம் மூட்டுகளில் யூரிக் அமிலம் தேங்கி நிற்பதால் தான் மூட்டுவலி ஏற்படும். இதை தயாரிக்க முடக்கத்தான் இலைகள் சிறிதளவு, வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு தேவை. ஒரு குக்கரில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில் கழுவி எடுத்த முடக்கத்தான் இலைகள் சேர்த்து, நறுக்கிய வெங்காயம் தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து வேக வைக்க வேண்டும். சுவைக்காக சிறிதளவு உப்பு பயன்படுத்தலாம். இதை குக்கரில் வைத்து 2 விசில் வரை வேகவிடலாம். இதற்கு பிறகு இதை வடிகட்டி தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி வீக்கம் நிரந்தரமாக குணமாகும்.

mudakkathan kashayam

மூட்டு வலி ஒரு கொடிய பிரச்சனையாக மாறாமல் இருக்க, ஆரம்பத்திலேயே கவனம் எடுத்துக்கொள்வது அவசியம். சீரான உணவு, தேவையான உடற்பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை மூலம் நீங்கள் இந்த மூட்டு வலி வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

Image source: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]