சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவின் மீது அதிக ஆசை இல்லாதவர்கள் ஒவ்வொருவரும் மீன்களைச் சாப்பிடலாம் என நினைப்பார்கள். கொழுப்புகள் அதிகம் கிடையாது. அதே சமயம் உடலுக்கு ஆற்றலை அளிக்கக்கூடிய ஒமோகா 3, பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளதால் அனைத்துத் தரப்பினரும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்றைக்கு அனைவரும் எளிதில் வாங்கும் அளவிற்கு விலை குறைந்த மத்தி மீனும், அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்
மற்ற மீன்களை விட மத்தி மீன்களில் அதிகப்படியான புரத சத்துக்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. மத்தி மீன்களை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் இன்சுலின் எதிர்ப்பை குறைத்து சர்க்கரை நோய் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் கட்டாயம் புரோட்டீன் நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். இதற்கு சிறந்த தேர்வாக உள்ளது மத்தி மீன்கள். இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலிமையாக்குகிறது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய முதுகு வலியைக் குறைக்கின்றது.
மேலும் படிக்க: புரதம் முதல் கீரைகள் வரை: குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் உணவுகளின் பட்டியல் - பெற்றோர்களே நோட் பண்ணுங்க
நமது உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்புகள் உடலில் படியும் போது இரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதயத்திற்குச் செல்லக்கூடிய இரத்த ஓட்டம் தடைப்படும் போது மாரடைப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பாதிப்பைத் தவிர்க்க மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது ஒருபுறம் இருந்தாலும், மத்தி மீன்கள் நல்ல தேர்வாக அமையும். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.
மேலும் படிக்க: Benefits of dates: இரும்புச் சத்து முதல் நார்ச்சத்து வரை; பேரீச்சம் பழத்தின் மூலம் கிடைக்கும் ஏராளமான பயன்கள்
மன அழுத்தம் என்பது பணிக்குச் செல்பவர்களுக்கு மட்டுமல்ல அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. இதை சரிசெய்வதற்கு ஒமேகா 3 அமிலங்கள் கொண்ட மத்தி மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதே போன்று நினைவாற்றல் இழப்பு, டிமென்ஷியா போன்ற பாதிப்புகளைச் சரி செய்யவும் உதவியாக உள்ளது.
Image credit - Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]