குழந்தைகளின் வளரும் பருவத்தில் அவர்களுக்கு என்ன உணவளிப்பது என சிந்திப்பது நிறைய பெற்றோருக்கு சவாலாக இருக்கும். ஏனெனில், ஒவ்வொரு வளர்ச்சி படிநிலையிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகள் மாற்றமடையும். அவர்களின் வளர்ச்சி, ஆற்றல் தேவை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு ஊட்டச்சத்துகளை வழங்குவது அவசியம்.
மேலும் படிக்க: ஊறவைத்த பூசணி விதைகளில் இவ்வளவு நன்மைகளா? நோட் பண்ணுங்க மக்களே
குழந்தைகளின் சிறந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அவர்களின் அன்றாட உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய சில ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சத்துகள் தொடர்பாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
புரதம் என்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக அடிப்படையானது. சிக்கன், மீன், பனீர் மற்றும் பருப்பு வகைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடலின் தசைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால், அவை மூளையின் வளர்ச்சிக்கும், அறிவாற்றலுக்கும் உதவுகின்றன. குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய, பல்வேறு வகையான புரதச்சத்து நிறைந்த உணவுகளை அவர்களின் அன்றாட உணவில் சேர்ப்பது மிகவும் முக்கியம்.
தானியங்கள், ஓட்ஸ், மற்றும் கோதுமை பொருட்கள் போன்ற முழு தானியங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கான தேர்வாக அமைகிறது. இவை நாள் முழுவதும் ஆற்றலை வழங்குவதோடு, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன. மேலும், முழு தானியங்களில் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றன. முழு தானியங்களை குழந்தைகளுக்கு அளிப்பது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும்.
பழங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. உதாரணமாக, ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இரும்புச்சத்தை சரியாக பெறுவதற்கும் உதவுகிறது. பெர்ரி வகைகள், ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்களில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பலவிதமான ஊட்டச்சத்துகள் உள்ளன.
மேலும் படிக்க: ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சாப்பிட வேண்டும்? அதிக உப்பு எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
பால், தயிர் மற்றும் பனீர் போன்ற பால் பொருட்கள் மூலம் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை பெறலாம். இவை வலுவான எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். பால் ஒவ்வாமை (lactose intolerance) உள்ள குழந்தைகளுக்கு பாதாம் பால், சோயா பால் அல்லது ஓட்ஸ் பால் போன்ற பொருட்களை வழங்கலாம். இவை ஏறத்தாழ பால் பொருட்களின் ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகின்றன. அன்றாட உணவில் பால் பொருட்கள் அல்லது அதற்கு மாற்றான பொருட்களை சேர்த்துக்கொள்வதன் மூலம், குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைப்பதை உறுதி செய்யலாம்.
விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளான வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் சின்க் ஆகியவை நிறைந்துள்ளன. பாதாம், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்றவை மூளையின் வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் துணைபுரியும் ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகின்றன. இவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
கீரைகளில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதில் கூர்மையான பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளன. இது தவிர, இரத்த சோகையை தடுக்க உதவும் இரும்புச்சத்து மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் போன்றவையும் கீரைகளில் உள்ளன.
இது போன்ற சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு நாள்தோறும் வழங்குவதன் மூலம் அவர்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]