சிறிய பசுமை தாவரமான எலுமிச்சை இந்தியா, இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிரம்பியுள்ளன. இவை அனைத்தும் வலுவூட்டப்பட்ட எலும்புகளுக்கு உத்தரவாதம் தருகின்றன.
எலுமிச்சையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி, உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை ஒழுங்குபடுத்தும் பொட்டாசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. லெமன் டீயில் சேர்க்கப்படும் வெல்லம் இரும்பின் சக்தியாக இருக்கிறது. இது உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் போக்குவரத்துக்கு முக்கியமானதாக அமைகிறது.
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலகத்தின் உள்ளடக்கம் அதிகளவில் உள்ளது. இது கல்லீரலை சுத்தப்படுத்த பெரிதும் உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் லெமன் டீ குடிப்பதால் கல்லீரலில் ஏற்கனவே சேர்ந்திருந்த கழிவுகள் மற்றும் நச்சுகள் ஆகியவை வெளியேறுவதால் உடலில் முழுவதுமாக நச்சு நீக்கப்படுகிறது.
மேலும் படிங்க Hibiscus Benefits : செம்பருத்தியின் எண்ணற்ற மருத்துவ குணங்கள்
லெமன் டீயில் சிறியளவிலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரை மற்றும் நார்களின் வடிவத்தில் இருக்கின்றன். இதனால் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதே நேரம் வளர்சிதை மாற்றமும் ஒழுங்குபடுகிறது. அதிகளவு உணவு உட்கொண்ட பிறகு லெமன் டீ குடித்தால் உடலில் செரிமானம் கணிசமாக மேம்படுகிறது.
லெமன் டீயில் இறந்த சரும செல்களை அகற்றி உங்கள் முகத்தை புத்துணர்ச்சியடையச் செய்யும் அஸ்ட்ரிஜென்ட்கள் உள்ளன. எலுமிச்சை பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் இருக்கின்றன, இது முகப்பரு மற்றும் அரிக்கும் தோலழற்சியை திறம்பட எதிர்த்து ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஹெஸ்பெரிடின் மற்றும் டையோஸ்மின் போன்ற எலுமிச்சையில் உள்ள தாவர ஃபிளாவனாய்டுகள் கொழுப்பைக் குறைக்கும் திறன்களைக் கொண்டுள்ளன. மாலை நேரத்தில் லெமன் டீ பருகினால் இதய நோய்கள் மற்றும் பக்கவாத பாதிப்பை தடுக்கலாம்.
மேலும் படிங்க Diabetes in Women : பெண்களே உஷார்! சரியா தூங்கலைன்னா நீரிழிவு நோய் ஏற்படும்
குறிப்பாக லெமன் டீயில் இஞ்சியைச் சேர்த்துப் பருகுவது உடலுக்குத் தேவையான அழற்சி எதிர்ப்புப் பண்புகளை வழங்குகிறது. இது குமட்டல் மற்றும் தசை வலியைக் குறைக்க உதவுவதோடு பசியை அடக்கும் மருந்தாகவும் உதவுகிறது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]