Kambu Koozh In Summer: கோடையில் கம்பங்கூழ் குடியுங்கள்-குளிர்ச்சியாக ஆரோக்கியமாக இருங்கள்!

சுட்டெரிக்கும் கோடை காலம் வந்துவிட்டது சாலையோர கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர்பானங்களை குடிப்பதற்கு மாற்றாக நமது பாரம்பரிய உணவான கம்பங்கூழை குடித்து ஆரோக்கியமாக இருங்கள்.

 
health benefits of drinking kambu koozh in summer

நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கம்பு தானிய வகைகளில் ஒன்றாகும். கம்பு, கேப்பை உள்ளிட்ட தானிய வகைகளை நமது முன்னோர்கள் பாரம்பரியமாக கூழ் கஞ்சி போல செய்து பிரதான உணவாக சாப்பிட்டு வந்தனர். குறிப்பாக இந்த கம்மங்கூழ், கேப்பை கூழ் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகவும் இருந்துள்ளது.

20 வருடங்களுக்கு முன்பு தினசரி தமிழகத்தில் அனைவரது வீட்டிலும் இந்த கம்பங்கூழை சாதாரணமாக தயாரித்து சாப்பிட்டு வந்தனர். ஏன் தமிழக முழுவதும் உள்ள அம்மன் கோவில் திருவிழாக்களில் திருவிழா நிறைவு பெறும் நாளில் கம்பங்கூழ், கேப்பைகூழை அம்மனுக்கு பிரசாதமாக படைத்து ஊர் மக்களுக்கு விநியோகிப்பார்கள் அந்த அளவிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கம்பங்கூழில் கொட்டிக் கிடக்கின்றது. தற்போதைய நவீன காலத்தில் பலரும் இந்த கம்பங்கூழ் மறந்து வருகிறார்கள். ஏன் பலரது இல்லங்களில் கூட இதை செய்ய தயங்கி வருகிறார்கள். அந்த அளவிற்கு பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளை விரும்பி சாப்பிடுவதற்கு தற்போதைய இளைஞர்களும் பெண்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

முன்னோர்களின் கம்பங்கூழ்

health benefits of drinking kambu koozh in summer

பாரம்பரிய மிகவும் சத்தான உணவான கம்பங்கூழ் தற்போது தமிழக முழுவதும் தள்ளுவண்டி கடைகளில் பேருந்து நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதை நாம் பார்ப்போம். முன்பெல்லாம் கோடை காலம் வந்து விட்டாலே கம்பு மற்றும் கேப்பை ஆகிய தானியங்களை பயன்படுத்தி தினசரி கூழ் கஞ்சி தயாரித்து காலை சாப்பிட்டு வந்தார்கள். குறிப்பாக இந்த கூழை முதல் நாள் இரவில் செய்து வைத்தால் போதும் அடுத்த நாள் காலை உணவிற்கு சிறிய வெங்காயம், ஊறுகாய், தக்காளி கூட்டு, வீட்டில் மீதமடைந்த குழம்பு காய்கறிகளை வைத்து சாப்பிட்டு வருவது வழக்கம்.

எங்கு கிடைத்தாலும் கம்பங்கூழ் குடியுங்கள்

health benefits of drinking kambu koozh in summer

சுட்டெரிக்கும் கோடை காலம் வந்துவிட்டது. இந்த கோடை காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது வழக்கம் மிக முக்கியமாக உடல் சூட்டின் காரணமாக இளம் வயது வாலிபர்கள் முதல் முதியவர்கள் வரை பல பிரச்னைகளை சந்திப்பார்கள். அவர்களுக்கான பாரம்பரியமான அற்புத பானம் தான் இந்த கம்பங்கூழ் இதை எங்கு கிடைத்தாலும் தாராளமாக வாங்கி சாப்பிடலாம்.அந்த அளவிற்கு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. உடல் சூட்டை தணிப்பதாக நினைத்து சாலையோரங்களில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர்பானங்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக அதே சாலை ஓரங்களில் விற்கப்படும் பாரம்பரிய உணவான கம்பங்கூழ் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு முழுவதுமாக குறையும்.

கோடையில் கம்பங்கூழ் குடிப்பதின் ஆரோக்கிய நன்மைகள்

health benefits of drinking kambu koozh in summer

கோடையில் கம்பங்கூழ்

பாரம்பரிய தானிய வகைகளில் ஒன்றான கம்பு இரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி உடல் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். கம்பில் அதிகளவு புரதம்,இரும்புச்சத்து நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவைகள் நிறைந்துள்ளது. வைட்டமின் ஈ, பி மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கனிம சக்திகள் பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை கம்பில் நிறைந்துள்ளது.

உடல் சூட்டை முற்றிலும் குறைக்கும்

கோடைக்காலம் வந்து விட்டாலே பலருக்கும் உடல் சூடு பிரச்சனை வரும் குறிப்பாக முகம் மற்றும் அந்தரங்க பகுதிகளில் சீல் கலந்த கட்டிகள் வரும். இவை அனைத்தும் உடல் சூட்டால் வரும் பிரச்சனைகள் ஆகும். உடல் சூட்டை குறைப்பதற்கு இளநீருக்கு மாற்றாக இந்த கம்பங்கூழை நாம் தினமும் குடிக்கலாம். தினமும் காலை மோர் கலந்த குளிர்ச்சியான கம்பங்கூழ் குடிக்கும்போது உடல் சூடு குறைந்து நாள் முழுவதும் பசி உணர்வு இல்லாமல் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். கம்பங்கூழ் உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் வழங்கும்.

இரத்த சோகையை கட்டுப்படுத்தும் கம்பங்கூழ்

கம்பில் அதிக அளவு கால்சியம் இரும்புச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் உள்ள செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். மேலும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். கம்பை தினமும் உணவில் நீங்கள் சேர்த்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

மலச்சிக்கலை போக்கும் கம்பங்கூழ்

தற்போதைய நவீன காலத்தில் பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளை இளைஞர்கள் முதல் சிறியவர்கள் முதியவர்கள் என அனைவரும் சாப்பிட்டு வருகின்றனர். இதன் காரணமாக பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை வருகிறது. கம்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவுகிறது. அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை நாம் தினசரி சாப்பிடுவது உடல் எப்போதும் ஆற்றலோடு பாதுகாப்பாக இருக்கும்.

உடல் எடையை குறைக்கும் கம்பங்கூழ்

கம்பங்கூழில் உள்ள ட்ரிப்டோ பேன் என்ற அமினோ அமிலம் நம் பசி உணர்வை குறைத்து உடல் எடையை நிர்வகிக்க உதவும். கம்பங்கூலை தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை கட்டுக்குள் வரும். ஒரு கிளாஸ் குடித்தாலே பசி உணர்வு இல்லாமல் இருக்க முடியும். பாரம்பரிய உணவான கம்பங்கூழ் காலை உணவாக எடுத்துக் கொள்வது உடல் எடையை குறைக்க நினைப்பவருக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

மேலும் படிக்க:உடலில் பாக்டீரியா தொற்று அபாயத்தை குறைக்க உதவும் இயற்கை உணவுகள்!

சர்க்கரை நோயை போக்கும் கம்மங்கூழ்

கம்பங்கூழ் குடித்து வருவது நீரழிவு நோய்க்கு சிறப்பாக செயல்படுகிறது கம்பில் அதிக அளவு நார்ச்சத்து குறைந்த அளவு கிளை சேமிக்ஸ் இன்டெக்ஸ் உள்ளது. இது சர்க்கரை நோய் ஏற்படாமல் காக்க உதவும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி டைப் 2 சர்க்கரை நோயாளிகளை பாதுகாக்கும்.

image source: google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP