herzindagi
image

வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் இறால் ஆம்லெட் செய்வோமா? எளிய சமையல் குறிப்புகள் இங்கே!

வீடுகளில் வழக்கமாக செய்யும் ஆம்லெட் டுகளுக்கு மாற்றாக ஏதேனும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒருமுறையாவது இறாலை வைத்து ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள்.
Editorial
Updated:- 2025-11-13, 23:43 IST

ஒவ்வொரு வீடுகளிலும் ஏதேனும் விசேச நாட்கள் என்றால் வித்தியாசமாகவும், சுவையாகவும் செய்ய வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. அதிலும் அசைவ பிரியர்கள் என்றால் என்னென்ன ரெசிபிகள் செய்யலாம்? என்ற தேடலில் அதிகளவில் இருப்பார்கள். ஆனாலும் ஒரே மாதிரியாக செய்து சாப்பிடும் போது சில நேரங்களில் சளிப்பாகிவிடும். இந்நேரத்தில் கொஞ்சம் வித்தியாசமாகவும், சுவையாகவும் செய்ய வேண்டும் என்றால் வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் ஒருமுறையாவது இறால் ஆம்லேட் செய்துப் பாருங்கள். வித்தியாசமான சுவையை மட்டுமல்ல உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

ஹோட்டல் ஸ்டைலில் இறால்  ஆம்லெட் :

முட்டையை வைத்து முட்டை ஆம்லெட் , நண்டு  ஆம்லெட் , சிக்கன் ஆம்லேட் என விதவிதமாக செய்திருப்போம். இன்றைக்கு மீன் வகைகளில் ஒன்றான இறாலை வைத்து எப்படி  ஆம்லெட் செய்யலாம் என்றும் இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என அறிந்துக் கொள்ளுங்கள். 

இறால்  ஆம்லெட்டிற்குத் தேவையான பொருட்கள்:

  • முட்டை - 3
  • பெரிய வெங்காயம் - 2
  • தக்காளி - 1
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • மிளகு தூள் - அரை டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • இறால் - கால் கிலோ

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேன் நெல்லிக்காயை சுலபமாக செய்யும் முறை!

இறால் ஆம்லெட் செய்யும் முறை:

  • வீட்டில் இறால் ஆம்லெட் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்துக் கொள்ளவும்.
  • இதனுடன் பெரிய வெங்காயம் இரண்டையை பொடி பொடியாக நறுக்கிய பின்னதாக உடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் சிறிதளவு கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்ந்துக் கலந்துக் கொள்ள வேண்டும். தற்போது இறால் ஆம்லெட்டிற்கான முட்டை கலக்கி ரெடி.

  • இதையடுத்து கால் கிலோ அளவிற்கு எடுத்து வைத்துள்ள இறாலை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போன்றவற்றைச் சேர்த்து ஒரு பத்து நிமிடங்களுக்கு மேலாக நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: காயல்பட்டினம் ஸ்பெஷல் மிளகு சிக்கன் செய்யலாமா? இதோ எளிய செய்முறை விளக்கம் இங்கே!

  • மிதமான சூட்டில் வைத்து இறாலை நன்கு வதக்கவும். பாதி அளவிற்கு வெந்தவுடன் ஏற்கனவே ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். தற்போது இறால் ஆம்லெட் செய்வதற்காக கலவை ரெடி.

மேலும் படிக்க: நாவில் எச்சில் ஊற வைக்கும் பன்னீர் பாயாசம் செய்யலாம் வாங்க!‘

  • இறுதியாக அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தோசைக் கல்லை சூடேற்றவும். கொஞ்சம் சூடு ஏறியதும் கலந்து வைத்துள்ள இறால் கலவையை ஊற்றி ஆம்லெட் போன்று இரண்டு பக்கங்களும் வேக வைத்து எடுத்தால் போதும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவை மிகுந்த இறால் ஆம்லெட் ரெடி.

 Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]