கர்ப்பம் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாகும், இந்த நேரத்தில் அவர்களின் உடலிலும் மற்றும் மன ஆரோக்கியத்திலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இதை தவிர கர்ப்ப காலத்தில் பெண்கள் ஹார்மோன் அல்லது உயிரியல் மாற்றங்களையும் அனுபவிக்கிறார்கள். இதனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் உணவுமுறை குழந்தையின் வளர்ச்சிக்கும், தாய் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் பல பெண்கள் நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறார்கள். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க பெண்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணர வைக்கும் உணவைப் பின்பற்றுவது நல்லது. சில உணவுப் பொருட்களை அவர்களின் உணவில் சேர்த்தால், அவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணருவார்கள், மேலும் தொடர்ந்து ஆற்றலைப் பெறுவார்கள்.
கர்ப்ப காலத்தில் பால் மிகவும் ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாகும். 100 கிராம் சர்க்கரை சேர்க்காத பசும்பாலில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் டி, வைட்டமின் ஏ மற்றும் புரதம் உள்ளது. கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக உணர வைக்கும், எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும். இதனால் கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது தாய் மற்றும் குழந்தைக்கு நல்லது.
கர்ப்ப காலத்தில், பெண்கள் சில நேரங்களில் இனிப்புகளையும், சில நேரங்களில் காரமான உணவுகளையும் சாப்பிட விரும்புவார்கள். இதனால் பல பெண்கள் துரித உணவு, ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் போன்றவற்றை சாப்பிடத் தொடங்குகிறார்கள். ஆனால் இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதற்கு பதிலாக பெண்கள் கர்ப்ப காலத்தில் பச்சை காய்கறிகளை சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகளில் இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
மேலும் படிக்க: இலுப்பை பூ சம்பா அரிசியை வடித்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழலாம்
ஆரோக்கியமான கருப்ப காலத்தை அனுபவிக்க நட்ஸ்கள் மற்றும் விதைகளை உணவில் சேர்ப்பது சிறந்த உணவாக இருக்கும். பாதாம், சியா விதைகள், வால்நட்ஸ் மற்றும் பிற நட்ஸ்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நல்ல கொழுப்பால் நிரம்பியுள்ளன. தினமும் காலையில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். கர்ப்ப காலத்தையும் குழந்தையின் பிறப்பு எடையை அதிகரிக்க செய்ய உதவுகிறது.
இவை அனைத்தும் கருவின் வளர்ச்சிக்கு உதவுகின்றன மற்றும் உடலில் உள்ள அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டையும் பூர்த்தி செய்கின்றன. கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகள் ஃபோலிக் அமிலத்தின் வளமான மூலமாக இருப்பதால் அவற்றை உணவில் சேர்க்க வேண்டும். உடலில் உள்ள அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டையும் பூர்த்தி செய்வதன் மூலம், நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணருவீர்கள்.
மேலும் படிக்க: தினமும் அன்னாசி பழம் சாப்பிடலாமா? உடலுக்கு என்ன ஆகும் தெரிஞ்சிக்கோங்க
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]