உடல் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் ஏ, ஈ, பி12 மற்றும் கே பல்வேறு காரணங்களுக்காக முக்கியமானவை. இவை நமது உடலைத் சரியாக இயக்கி நோய்களைத் தடுக்கின்றன. ஒரு வைட்டமின் உங்களுடைய கண்களுக்கு நல்லது என்றால் மற்றொரு வைட்டமின் உங்களது குடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகிறது. இதில் குறிப்பாக வைட்டமின் கே எலும்பின் வளர்சிதை மாற்றம், இரத்தம் உறைதல் மற்றும் இரத்தத்தில் கால்சியத்தின் அளவை ஒழுங்குபடுத்துகிறது.
அறிவாற்றல் சிந்தனை, இதய ஆரோக்கியம் மற்றும் எலும்புகளுக்கு வைட்டமின் கே அவசியமானதாகும். எனவே குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் வைட்டமின் கே நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வைட்டமின் கே குறைபாட்டின் அறிகுறிகள்
வைட்டமின் கே குறைபாட்டின் அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாறுபடும். பெண்களுக்கு உடலில் வைட்டமின் கே அளவு குறைந்தால் இரத்தப்போக்கு ஏற்படலாம். மேலும் சமீபத்தில் நீங்கள் அறுவை சிகிச்சை செய்திருந்தால் எளிதில் சிராய்ப்புக்கு ஆளாகலாம் அல்லது இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.
மற்ற அறிகுறிகள்
- மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு
- மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதால் இரத்த சோகை
- கடுமையான சோர்வு
வைட்டமின் கே குறைபாட்டிற்கான காரணங்கள்
- வார்ஃபரின் அல்லது இரத்த உறைவு எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடு
- அண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு
- வைட்டமின் கே இல்லாத உணவுகளை உட்கொள்வது
வைட்டமின் கே கொண்ட உணவுகள்
வைட்டமின் கே குறைபாட்டிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமானால் இங்கே பகிரப்படும் உணவுகளைச் சாப்பிடுங்கள்.
மேலும் படிங்க14 மணி நேரம் விரதம் இருந்தால் உடலுக்கு நல்லது
இலை காய்கறிகள்
எந்த வயதினராக இருந்தாலும் பச்சை இலைக் காய்கறிகள் உங்களை ஆரோக்கியத்துடன் செயல்படுவதற்கு முக்கியமானவை. இவற்றில் வைட்டமின்கள் கே, பி1, சி, ஏ, ஈ, பி4, பி3, பி6 மற்றும் பி5 நிறைந்துள்ளன. மேலும் மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றை உடலில் சேர்க்கின்றன. இவற்றில் கொழுப்புச் சத்தும் மிகக் குறைவு. எனவே உணவுப் பழக்கத்தில் கீரைகள், முட்டைக்கோஸ், பிரஸ்ஸல்ஸ், கீரை மற்றும் ப்ரோக்கோலி ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும்.
தயிர்
வைட்டமின் கே தவிர தயிரில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, இரும்பு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. இதில் அதிக புரதம் இருக்கிறது. மேலும் செரிமானத்தை மேம்படுத்திக் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. தயிர் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அவகேடோ
இந்தப் பழத்தில் வைட்டமின்கள் கே, ஈ மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. தாமிரம், மெக்னீசியம், மாங்கனீசு, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியமும் உள்ளன. அவகேடோ பழங்கள் குடல் ஆரோக்கியத்திற்கும், இதயத்திற்கும் மிகவும் நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கும், சீராக உடல் எடையை வைத்திருக்க விரும்புபவர்களுக்கும் அவகேடோ பழங்கள் மிகவும் ஏற்றவை.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation