herzindagi
image

Omavalli leaf benefits in tamil: ஓமவல்லி இலைகள் மூலம் நமக்கு கிடைக்கும் மருத்துவ பயன்கள் குறித்து விரிவான அலசல்

Omavalli leaf benefits in tamil: ஓமவல்லி இலைகளில் இருந்து நமக்கு கிடைக்கும் பல்வேறு வகையான பயன்களை இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இவை நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Editorial
Updated:- 2025-09-25, 14:49 IST

Omavalli leaf benefits in tamil: நமது வீட்டிலேயே சில வகையான மூலிகைகள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றின் மருத்துவ பயன்கள் குறித்து நாம் பெரும்பாலும் அறிவதில்லை. அப்படிப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த மூலிகை குறித்து காண்போம். 

மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்

 

நமது பாரம்பரிய மருத்துவத்தில், பல நோய்களுக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள் உள்ளன. அவற்றில் தனித்துவமான ஒன்றாக ஓமவல்லி இலைகள் விளங்குகின்றன. இதனை "கற்பூரவல்லி" என்றும் அழைப்பார்கள். இது இருமல், சளி போன்ற சாதாரண உபாதைகள் முதல் பலதரப்பட்ட நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அவற்றின் நன்மைகளை இதில் பார்க்கலாம்.

 

இதை பயன்படுத்தி செய்யப்படும் ரசம், சளி மற்றும் இருமலுக்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும். இதில் கார்வாக்ரோல் (Carvacrol) மற்றும் தைமால் (Thymol) போன்ற சளி அகற்றும் பண்புகள் அதிக அளவில் உள்ளன. இவை சளி, தொண்டை வலி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கின்றன. இந்தச் செடியின் இலைகளை சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து அரைத்துச் சாப்பிடுவது, சில சுவாச பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கக்கூடியது.

Omavalli leaf benefits

 

வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்:

 

ஓமவல்லியில் உள்ள வைரஸ் எதிர்ப்பு பண்புகள் பல தொற்று நோய்களுக்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டவை. இது, சால்மோனெல்லா டைஃபிமூரியம் (Salmonella Typhimurium), எஸ்கெரிச்சியா கோலை (Escherichia coli) போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்ட சக்திவாய்ந்த பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை (Anti-fungal and Anti-bacterial properties) கொண்டுள்ளது. இது சரும நோய்கள், வாய்ப்புண், விக்கல், செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்று வலி போன்றவற்றுக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

மேலும் படிக்க: Benefits of aloe vera gel: கற்றாழை பயன்படுத்துவதால் உங்கள் சருமத்திற்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

 

உடல் மற்றும் சருமப் பாதுகாப்பு:

 

தலைவலிக்கு நிவாரணம் அளிக்க, ஓமவல்லி இலை சாறை நெற்றியில் தடவலாம். இது காயங்கள், கொப்புளங்கள் மற்றும் சரும நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஓமவல்லி, கொலஜன் உருவாக்கத்தை மேம்படுத்துகிறது, காயங்கள் குணமாகும் காலத்தை குறைக்கிறது. குறிப்பாக குளிர்காலத்தில், தலைவலி மற்றும் சளி வராமல் தடுக்க ஓமவல்லி இலை எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். இது தலைமுடி பிரச்சனைகள் மற்றும் பொடுகுக்கு சிகிச்சையளிப்பதிலும் பயனளிக்கிறது.

Omavalli leaf uses

 

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த ஓமவல்லி இலைகளை மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் எடுத்துக் கொள்ளும் போது அதன் கூடுதல் பலன்களை பெற முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]