Benefits of aloe vera gel: நமது சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதில் கற்றாழைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. குறிப்பாக, இரசாயனங்கள் எதுவும் இல்லாமல் இயற்கையான பொருட்களை விரும்புபவர்களுக்கு கற்றாழை விருப்பமான ஒரு அம்சமாக திகழ்கிறது. இதில் இருக்கும் எண்ணற்ற பயன்கள் நமது சருமத்திற்கு இயற்கையான முறையில் பளபளப்பை கொடுக்கின்றன. அதனடிப்படையில் கற்றாழையில் இருக்கும் முக்கிய பண்புகளை இதில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை இயற்கையான வழியில் அதிகரிக்க உதவும் 5 ஹேர்மாஸ்க்
கற்றாழையில் உள்ள என்சைம்கள், இறந்த சரும செல்களை நீக்கி, புதிய செல்கள் உருவாக உதவுகின்றன. இதன் மூலம், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் திட்டுகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறும். இது சருமத்திற்கு ஒரு புதிய பொலிவையும் தருகிறது.
கற்றாழையில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் அன்டிஆக்சிடென்கள் நிறைந்துள்ளன. இவை, சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாத்து, அதன் இளமையையும், ஆரோக்கியத்தையும் தக்கவைக்க உதவுகின்றன. குறிப்பாக, சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இது செயல்படுகிறது.
சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு கற்றாழை ஒரு அற்புதமான நிவாரணி. இதில் உள்ள குளிர்ச்சியான மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், சிவந்து போன மற்றும் வீங்கிய சருமத்தை பாதுகாக்கும். மிதமான வெயிலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய, இது சிறந்த தீர்வாகும்.
மேலும் படிக்க: தயிர் இருந்தால் போதும் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றலாம்!
கற்றாழை, பருக்களை எதிர்த்து போராடுவதில் ஒரு ஆயுதம் என்றே சொல்லலாம். இதில் இயற்கையாகவே உள்ள சாலிசிலிக் அமிலம் மற்றும் பிற சேர்மங்கள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி பண்புகளை கொண்டுள்ளன. இது பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, தெளிவான சருமத்திற்கு உதவுகிறது.
குளிர்விக்கப்பட்ட கற்றாழை ஜெல்லை கண்களுக்குக் கீழே தடவுவது, வீக்கத்தைக் குறைக்கவும், அந்த பகுதியை ஆற்றவும் உதவும். இது கண்களுக்கு கீழே உள்ள கரு வளையங்கள் மற்றும் சோர்வான தோற்றத்தை குறைக்க உதவுகிறது.
கற்றாழையில் உள்ள குளுகோமன்னன் மற்றும் கிபெர்லின் (gibberellin) போன்ற கலவைகள், புதிய செல்கள் வளர்ச்சியை தூண்டி, புதிய திசுக்கள் உருவாக உதவுகின்றன. இது சிறிய கீறல்கள் மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது.
கற்றாழை ஜெல் பெரும்பாலும் தண்ணீரால் ஆனது. இது சரும துளைகளை அடைக்காமல், அனைத்து வகை சருமத்திற்கும் ஒரு சிறந்த ஹைட்ரேட்டராக செயல்படுகிறது. எனவே, இது உங்கள் சருமம் வறண்டு போவதை திறம்பட தடுக்கிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]