சமீப காலமாக, முடி உதிர்தல் பிரச்சனை பலருக்கும் மன உளைச்சலை கொடுக்கிறது. ஆனால், இதற்காக கவலைப்பட தேவையில்லை. நமது வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை கொண்டு, நெற்றி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் அடர்த்தியான முடியை வளரச் செய்யலாம். இந்த ஐந்து இயற்கையான வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள். சில வாரங்களிலேயே அதன் பலனை நீங்கள் கண்கூடாகக் காணலாம்.
மேலும் படிக்க: Korean hair care: இளம் தலைமுறையினர் விரும்பும் கொரியன் ஹேர் ஸ்டைல் வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
உங்கள் வீட்டில் கற்றாழை செடி இருந்தால், முடி உதிர்தல் குறித்து கவலை கொள்ள வேண்டாம். தலைமுடி மற்றும் சருமத்திற்கு கற்றாழை ஒரு வரப்பிரசாதம். கற்றாழை இலையில் இருந்து நேரடியாக பிரித்தெடுக்கப்பட்ட ஜெல்லை எடுத்து, கூந்தல் அடர்த்தி குறைவாக இருக்கும் இடங்களில் தடவவும். அதை இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து, காலையில் சாதாரண நீரில் கழுவலாம். இந்த முறையை தினமும் இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன் பின்பற்றினால், உடனடி பலனை பெறலாம். கற்றாழையில் உள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள் (Proteolytic enzymes), உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியை தூண்டுகின்றன.
முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு ரோஸ்மேரி எண்ணெய் மிகவும் பயனுள்ளது. அதே சமயம், தேங்காய் எண்ணெய் முடியின் வேர்களுக்குள் ஆழமாக சென்று, வேர்களை வலுப்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். 10 துளிகள் ரோஸ்மேரி எண்ணெய்யுடன் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். இந்தக் கலவையை நெற்றி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் இரவில் தடவி விட்டு, காலையில் மிதமான ஷாம்பு கொண்டு குளிக்கவும். இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை பின்பற்றலாம்.
மேலும் படிக்க: மழைக்காலத்தில் கூந்தல் சார்ந்த பிரச்சனைகளை தடுக்க உதவும் சத்தான உணவுகள்
நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை இரண்டிலும் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால், இவை கொலஜன் உற்பத்தியை அதிகரித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. 4 டேபிள்ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு பசையாக கலக்கவும். இந்தப் பசையை உச்சந்தலை மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் தடவி, இரவு முழுவதும் ஊறவிடவும். காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி செய்தால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
இந்த எளிமையான வீட்டு வைத்தியத்திற்கு, வெந்தயம் மற்றும் தண்ணீர் மட்டுமே தேவை. வெந்தயத்தை குறைந்தது 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அரைத்து ஒரு பசையாக தயாரிக்கவும். இதனை முடி அடர்த்தி குறைவாக இருக்கும் இடங்களில் தடவலாம். இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்த வெந்தயம், அழற்சி எதிர்ப்பு தன்மையை கொண்டுள்ளது. இது முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. இதை மேலும் பயனுள்ளதாக்க, பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
2 பழுத்த வாழைப்பழங்கள், 1 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை இரவு முழுவதும் தலையில் தடவி, மறுநாள் காலை குளித்து விடலாம். இதனை தலையில் தேய்த்த பின்னர் ஷவர் கேப் அணிந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் இயற்கை எண்ணெய்கள், வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், முடி உதிர்தல் பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]