herzindagi
image

Korean hair care: இளம் தலைமுறையினர் விரும்பும் கொரியன் ஹேர் ஸ்டைல் வேண்டுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

Korean hair care: ஜென்ஸி (Gen Z) தலைமுறையினருக்கு தற்போது கொரியன் முடி மற்றும் சரும பராமரிப்பு முறைகளில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் சிம்பிளான கொரியன் ஹேர் கேர் டிப்ஸை எப்படி பின்பற்றுவது என்று இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-09-21, 12:25 IST

Korean hair care: தலை முடியை சரியாக பராமரிப்பது என்பதே இன்றைய காலகட்டத்தில் பெரும் கவலையாக இருந்து வருகிறது. குறிப்பாக, தொடர்ந்து மாறி வரும் ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் தங்கள் சிகை அலங்காரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தற்போதைய ஜென்ஸி (Gen Z) தலைமுறையினர் இடையே பரவலாக காணப்படுகிறது.

மேலும் படிக்க: Skin care: பளபளக்கும் சருமத்திற்கு ஸ்கின் கேர் மட்டும் போதாது; இந்த எளிய உணவுகளை தினந்தோறும் சாப்பிடவும்

 

ஆனால், இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலரிடம் இருக்கிறது. இதற்கு உதவும் விதமாக ஒரு சிம்பிளான கொரியன் ஹேர் கேர் டிப்ஸை இந்த செய்திக் குறிப்பில் நாம் விளக்கமாக பார்க்கலாம். இது இளம் தலைமுறையினரை கவரும் வகையில் அமையும்.

 

உச்சந்தலையை முதலில் சுத்தம் செய்யவும்:

 

கொரியன் ஹேர் கேர் வழக்கமானது ஆரோக்கியமான உச்சந்தலையில் இருந்து தொடங்குகிறது. உங்கள் கூந்தலுக்கு ஏற்ற, மென்மையான ஷாம்புவை பயன்படுத்தவும். இது, வியர்வை, அதிகப்படியான எண்ணெய் மற்றும் மாசுகளை நீக்கும். ஈரப்பதமான வானிலைக்கு, டீ ட்ரீ ஆயில், புதினா அல்லது கிரீன் டீ போன்ற பொருட்கள் கலந்த ஷாம்பூவை பயன்படுத்தலாம். இது வேர்க்கால்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

Hair style

 

ஈரப்பதமான கூந்தலுக்கான கண்டிஷனர்:

 

அதிக கெட்டியான க்ரீம்களுக்கு பதிலாக, புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த மென்மையான கண்டிஷனரை தேர்ந்தெடுக்கவும். இது, கூந்தலை மென்மையாக்க உதவுவதோடு, வேர்க்கால்களை அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

 

குளிர்ந்த நீரில் முடியை அலசவும்:

 

குளிக்கும் போது, இறுதியாக குளிர்ந்த நீரால் முடியை அலசுங்கள். இது, கூந்தலில் உள்ள நுண்குழல்களை மூடி, பளபளப்பை கூட்டுகிறது. மேலும், முடி உதிர்வதையும் குறைக்கிறது.

மேலும் படிக்க: Pumpkin seeds for hair growth: முடி உதிர்வை தடுக்க உதவும் பூசணி விதைகள்; உங்கள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ளவும்

 

ஹேர் எசன்ஸ் பயன்படுத்தலாம்:

 

கொரியன் ஹேர் கேர், சரும பராமரிப்பு போலவே, கூந்தல் பராமரிப்பிலும் எசன்ஸை பயன்படுத்துகிறது. கூந்தல் ஈரமாக இருக்கும்போது, பான்தெனோல், கெரட்டின் அல்லது சில்க் புரோட்டீன் கலந்த வாட்டர் பேஸ்டு ஹேர் எசன்ஸை பயன்படுத்துங்கள். இது, கூந்தலை பளபளப்பாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவுகிறது.

Hair style

 

லைட் சீரம் கொண்டு ஈரப்பதத்தை தக்கவைக்கவும்:

 

மழைக்காலத்தில் ஈரப்பதம் முடி உதிர்வை ஏற்படுத்தும். எனவே, சிலிகான் அல்லது ஈரப்பதத்தை தடுக்கும் பாலிமர்கள் கொண்ட ஆண்டி-ஃப்ரிஸ் சீரம் அல்லது ஹேர் க்ரீமைப் பயன்படுத்தி, முடியை பாதுகாக்கலாம். இது, கூந்தலுக்கு ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும்.

 

ப்ளோ-டிரையிங் முறை:

 

மழைக்காலத்தில், காற்றில் உலர்த்துவது கூந்தலை பலவீனமாக மாற்றும். முடியின் வேர்களை முதலில் ப்ளோ-டிரை செய்யத் தொடங்கி, பிறகு ஸ்டைலிங்கிற்கு ஏற்ப குளிர்ந்த காற்றை பயன்படுத்தி கூந்தலை உலர வைக்கவும். இது, கூந்தல் நுண்குழல்களை மூடி, முடியை பளபளப்பாக மாற்றும்.

 

ஸ்பிரே பயன்படுத்தவும்:

 

லைட்வெயிட் செட்டிங் ஸ்பிரே அல்லது ஆண்டி-ஹ்யூமிடிட்டி ஸ்பிரே என்பது கொரியன் ஹேர் கேரின் ரகசியம். இது, உங்கள் கூந்தலின் ஸ்டைலை நாள் முழுவதும் வைத்திருக்க உதவுகிறது.

 

கொரியன் ஹேர் கேர் முறை, கூந்தலை கனமில்லாமல் ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், முடியின் நுண்குழல்களை பாதுகாத்து, காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தில் இருந்து கூந்தலை காக்கிறது. இந்த வழக்கத்தை பின்பற்றுவதன் மூலம், எவ்வளவு ஈரப்பதம் நிறைந்த வானிலையாக இருந்தாலும், நீங்கள் மென்மையான, பளபளப்பான கூந்தலை தக்க வைக்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]